சந்திரிகா குமாரதுங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு தனது ஆதரவை வழங்குவார்

0
0

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு தனது ஆதரவை வழங்குவார் என அவரது ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கிறேன். அர்ஜூன ரணதுங்க போட்டியிடுகின்ற கம்பஹா  மாவட்டத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்தே அவர் அதிக கவனம் செலுத்துவார்.அதேவேளை கட்சியின் ஓட்டுமொத்த பிரச்சாரத்திலும் அவர் கவனம் செலுத்துவார்.

அவர் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு ஆதரவை வழங்குவது குறித்து சிறிது தயக்கம் கொண்டிருந்தார் எனினும் வேறு வழியின்றி அந்த சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்துள்ளார், அதனால்அது அவரிற்கு ஓரு பிரச்சினையில்லை.

அவர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்,அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்க வேண்டிய தேவை எதுவும் தற்போதில்லை. ஜனவரி 8 ம் திகதி புரட்சியை காப்பாற்றவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என சந்திரிகாவின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here