சபாநாயகராக மஹிந்த யாபா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

0
0

இலங்கைச் சனநாயக சோஷலிஸக் குடியரசின் சபாநாயகராக இன்று கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரியான மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

09 ஆவது பாராளுமன்றத்தின் பூர்வாங்க அமர்வுகள் இன்று காலை ஆரம்பமான போது அரசியலமைப்பின் 64 (1) பிரிவின்படி சபாநாயகர் தெரிவு, சபாநாயகரது பதவிப் பிரமாணம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம், துணைச் சபாநாயகர் தெரிவு, செயற்குழுத் தலைவர் தெரிவு என்பன இடம் பெற்றன.

சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இலங்கைப் பாராளுமன்றத்தின் 11 ஆவது சபாநாயகராகப் பதவியேற்றார்.

பிரதிச் சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார். குழுக்களின் பிரதித் தவிசாளராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பரிந்துரைத்து ஜனாதிபதி அனுப்பிய கடிதத்துக்கிணங்க அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here