சம்பிக்க ரனவக்க தான் பொது பல சேனாவுக்கெதிராக நடவடிக்கை எடுக்க எங்கள விடவில்லை: மஹின்த ராஜபக்ஸ

0
1

பொது பல சேனாவுக்கெதிராக நடவடிக்கை எடுக்க சம்பிக்க ரனவக்க எங்களை விடவில என முன்னால் ஜனாதிபதி மஹின்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பொது பல சேனா போன்ற சில அமைப்புகளுக்கெதிராக நாம் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக முஸ்லிம்களது வாக்குகளை இழக்க நேரிட்டது. முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீதும் என் மீதும் வித்தியாசமான கருத்தை கொண்டார்கள். எதிர்கட்சி இதனை நன்றாக விளங்கி செயற்பட்டது.
நாம் ஆரம்பத்திலேயே இது தொடர்பாக அமைச்சரவையி்ல் ஆலோசித்தோம். அப்போது அமைச்சர் சம்பிக்க ரனவக்கதான் எங்களை அந்த அமைப்புகளில் கை வைக்கவிடவில்லை. சம்பிக்கவும் அவ்வாறான சதிகளுக்குப் பின்னால் உள்ளார் என்பதை நான் விளங்கிக்கொள்ள நன்றாகவே தாமதமாகிவிட்டது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here