சம்மாந்துறை தவிசாளராக மீண்டும் நௌசாட்

0
0

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் இராஜினாமாச் செய்தததைத் தொடர்ந்து அந்தப் பிரதேச சபைகளுக்கான புதிய தவிசாளர்களை செப்டம்பர் இரண்டாம் திகதி நடைபெறும் கூட்டத்தின் போது தெரிவு செய்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் புதிய தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக அப்துல் மஜீத் முஹம்மத் நௌஷாதும், நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அமரதாச ஆனந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் செப்டம்பர் 07 ஆம் திகதிய 2192/10 விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.எம்.எம்.நௌஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடனான முரண்பாட்டின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். பின்னர் இவர் இந்த இடத்துக்கு மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக இருந்த தவராசா கலைஅரசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். 2018 இல் 08 வாக்குகளுடன் இவர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டபோது சுயேட்சைக் குழுவிலிருந்து தெரிவாகியிருந்த தற்போதைய தவிசாளர் அமரதாச ஆனந்த 04 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here