சம்மாந்துறை பிரதேச சபைக்கு தலைவர் இல்லை

0
1

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைகளில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சபைகளினதும் தலைவர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதால் இந்த இடங்களுக்குப் பொருத்தமான தலைவர்களை செம்டம்பர் 02 ஆம் திகதி நடைபெறும் பிரதேச சபைக் கூட்டங்களில் தெரிவு செய்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2189/6 ஆம் இலக்க வர்த்தமானியிலேயே இந்த அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தவராசா கலைஅரசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் செல்வதால் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

சம்மாந்துரைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம்.எம்.நௌஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதவியை இராஜினாமா செய்திருப்பதாகத் தெரிய வருகிறது.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here