சவூதி இளவரசரின் கருத்தை இஸ்லாமிய பாராளுமன்ற அவை கண்டிக்கின்றது

0
0

சமீபத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் குறித்து சவூதி அறேபியாவின் இளவரசர் துருக்கி அல் பைசல் வெளியிட்ட கருத்தை இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதே மன்றத்தின் தலைவர் கண்டித்துள்ளார். பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை இவ்விரு இயக்கங்களும் உருவாக்குவதாக பைசல் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள பாராளுமன்ற ஒன்றியத் தலைவர் நாஸிர் அஸ்ஸனாஈ, குவைத்திலிருந்து வெளிவரும் அர்ரிஸாலா பத்திரிகைக்குக் கருத்து வெளியிடுகையில், ஹமாஸின் இலக்குகள் குறித்து யாரும் எங்களுக்குப் பாடம் புகட்ட வேண்டியதில்லை. இது குறித்து பைசல் வெளியிட்ட கருத்துகள் உண்மைக்குப் புறம்பானாவை. ஹமாஸ் சுதந்திரத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கெதிரான சதிப் புரட்சி நடந்தது. ஜனநாயகத்தைப் பரப்புவதாகக் கூறும் மேற்குலகம் இந்தப் பரீட்சையில்தான் முதலில் தோல்வி கண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here