சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் பணி இராணுவத்திடம்

0
1

அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் பணியை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று போக்குவரத்துச் சேவை அமைச்சில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணியை இராணுவத்துக்கு வழங்குவதன் மூலம் குறைந்த விலைக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடிவதாகவும், நாடு இழக்கின்ற அதிகளவான வருவாயை சேமிக்க முடிவதாகவும், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படும் தனிப்பட்டவர்களின் தகவல்களை இராணுவத்திடமே சேகரித்து வைக்க முடிவதாகவும் இதனால் அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணியை இராணுவத்திடம் ஒப்படைப்பதில் கவனம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கென இராணுவத்தினரையும் பாதுகாப்பு அமைச்சையும் இணைத்து கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2009 இல் தனியார் நிறுவனமொன்றுக்கு இந்தப் பணி வழங்கப்பட்டதால் ஒரு சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு 1340 ரூபா செலுத்த வேண்டியேற்பட்டதாகவும், இதனால் பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியில் சென்றதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here