சிஐடி பணிப்பாளர் நியமனம் தொடர்பில் அஹிம்சாவின் முறைப்பாடு. அரசியலமைப்புப் பேரவை விசாரணை

0
4

தனது தந்தையின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரை சிஐடியின் பணிப்பாளராக நியமித்தமை தொடர்பில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க அரசியலமைப்புப் பேரவைக்கு முன்வைத்த முறைப்பாட்டினை கவனத்திலெடுப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்துள்ளது.

அஹிம்சா இம்மாதம் தேசிய பொலிஸ் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏஆர்பிஜே அல்விஸை சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை தடுத்து நிறுத்துமாறும் தனது தந்தையின் கொலை தொடர்பில் கைது செய்யப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இவர் இதுபோன்ற உயர்ந்த பதவிக்குப் பொருத்தமானவரல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் ஒரு பிரதி அரசியலமைப்புப் பேரவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கின்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை புதன்கிழமை (24) கூடியபோது இந்த விவகாரத்தை கவனத்திலெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது. 

2010 ஆம் ஆண்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவிருந்த எஸ்எஸ்பி அல்விஸ் அவர்கள் தனது தந்தையின் கொலைகாரரைப் பாதுகாக்கும் வகையில் ஆதாரங்களை மறைத்தார் எனவும், அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சிடி விக்கிரமரத்ன இவரைக் கைது நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டிருந்ததாகவும் ஆனால் கடந்த மே 21 முதல் இவர் சிஐடியின் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அஹிம்சா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here