சிங்ஹல ராவய உட்பட ஆறு புதிய கட்சிகள் பதிவு

0
22

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 70 அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக மேலும் 06 புதிய கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.

பிவிதுரு ஹெல உருமய, சிங்ஹல ராவய, அருனலு ஜனதா பெரமுன, மக்கள் சேவகர்கள் கட்சி, புதிய ஜனநாயக மார்க்ஸ்வாத லெனின்வாதக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகியன புதிய கட்சிகளாகப் பதியப்பட்டுள்ளன.

புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்காக ஜனவரியில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு 154 கட்சிகள் விண்ணப்பித்திருந்தன. அவற்றுள் 121 விண்ணப்பங்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு 06 கட்சிகள் தெரிவு செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here