சிரியாவிலிருந்து அமெரிக்கப் படை பின்வாங்காது

0
1

சிரியாவில் அமைதி திரும்பும்வரை அமெரிக்கப் படை அங்கிருந்து வெளியேறாது என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மெட்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கருத்து வெளியிட்டபோது, நாம் மிக இலகுவாக சிரியாவை விட்டு வெளியேற மாட்டோம். சிரியாவில் சமாதானத்தை நிலைநாட்டிய பின்னரே நாம் வெளியேறிச் செல்வோம் என்று பென்டகனில் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய ஜிம் தெரிவித்தார்.

இது குறித்து ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயலாற்றுகின்றது எனவும் சிரியாவின் இன்றைய பாதுகாப்பு நிலமை மிகச் சிக்கலானது என்றும் ஜிம் மெட்டிஸ் மேலும் குறிப்பிட்டார். சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும், தாஇஷை முழுமையாக ஒழிப்பதும் அமெரிக்காவின் இலக்கு என்று பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here