சிரியா: அதிர்ச்சியூட்டும் ட்ரம்பின் திடீர் தாக்குதல்கள்!

0
0
சிரியாவில் போராளிகள் வசமுள்ள பகுதியில் இரசாயன ஆயுத தாக்குதல் நடந்தநிலையில், சிரியாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது அமெரிக்கா திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 59 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சிரியா தலைமைக்கு எதிராக ஏதாவது நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
 
செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
 
அவரது இந்த சமிக்ஞை, அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிர்வாகம் ஆறு ஆண்டுகால யுத்தத்தில் முதன் முதலாக சிரிய அரச இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இரவு நடத்தப்பட்ட தாக்குதல் ரஷ்யாவிற்கு ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்த சகல இராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்த முன் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது ஹமா நகரில் வேகமாக முன்னேறும் போராளிகளின் கையில் விமான நிலையம் வீழ முன்பு உலகை ஏமாற்ற நடத்தப்பட்ட ஒரு போலி நாடகமாகவும் இருக்கலாம். இதேவேளை துருக்கி, அமேரிக்கா, ஜரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் பின்பலமாக இருக்கும் போராளிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க உடன்பட்டுள்ளது.
எது எவ்வாறோ, 19 தடவைகள் தான் சிரியாவுக்கு தாக்குதல் நடாத்த மாட்டேன் என்று ட்விட்டர் மூலம் கூறிய ட்ரம்ப் நிர்வாகத்தின் இத் திடீர் தாக்குதல்கள் உலக அளவில் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதல்களின் பின் புதிய புள்ளியிலிருந்து அமெரிக்காவுக்கான தனது பங்களிப்பை சிரியா விவகாரத்தில் வழங்க துருக்கி உடன்பட்டுள்ளமையும் இங்கு நோக்கத் தக்கது.
– மீள்பார்வை சர்வதேச நிருபர் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here