சீரற்ற காலநிலையால் தொடர் பாதிப்புக்கள்;அறிக்கைக்கு உத்தரவு

0
1

13220935_1033761296713465_8054395816034407348_n-620x330நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பெய்துவரும் காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் சேதங்கள் பதிவாகியுள்ளன. பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வீதிகளில் மரம் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, பல நீர்த்தேக்கங்களில் வான் வரை நீர் நிரம்பி வழிவதால், வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

IMG-20160516-WA0021கொழும்பிலும் பல தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக இதுவரை 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உடன் அறிக்கை அறிவிக்குமாறு, அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பதுளை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

இதேவேளை, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், இலங்கையை விட்டு நகர்ந்து செல்வதால், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஓரளவு மழை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசர தொடர்புகளுக்கு ::

  • Army – 0112434251 / 0113818578

  • Navy – 0112445368 / 0112212230 / 0112212231

  • Air Force – 0112343970 / 0112343971

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here