சூடானை யெமனாக மாற்றுவதற்கு ஐக்கிய அறபு அமீரகம் முயல்வதாகக் குற்றச்சாட்டு

0
1

யெமனில் நிலவுவது போன்ற பாரிய மனிதாபிமான நெருக்கடியை சூடானிலும் உருவாக்குவதற்கு ஐக்கிய அறபு அமீரகம் முயற்சித்து வருவதாக சூடானிய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். சூடானில் சட்டம் மற்றும் அபிவிருத்திக் கட்சியின் தலைவர் முஹம்மத் அலி அல் ஜசூலி, தனது டுவிட்டர் பக்கத்தில் சூடானில் உள்ள கோத்திரத் தலைவர்களை அமீரகம் துஷ்பிரயோகம் செய்து நாட்டில் பெரும் அரசியல் குழப்பமொன்றை உருவாக்குவதற்கு எத்தனிக்கின்றது.

எரிட்ரியாவின் தலைநகர் அஸ்மராவில் இக்கோத்திரத் தலைவர்களை அமீரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதத்தலைவர்களில் ஒருவர் எரிட்ரிய கடவுச் சீட்டுடன் அபூதாபிக்குச் சென்றுள்ளதாக முஹம்மத் அலி தெரிவித்துள்ளார்.

சூடானின் ஒரு பகுதியைத் துண்டாடுவதற்கு அபூதாபி முயற்சிக்கின்றது என சட்டத்திற்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here