செல்வங்களை மீட்டெடுப்பதில் துனீசியாவுக்கு சிக்கல்

0
0

அரபு வசந்தம் ஆரம்பித்த துனீசியாவில் முன்னைய சர்வாதிகார ஆட்சியாளார்களால் நாட்டுக்கு வெளியில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான செல்வங்களை மீட்டு நாட்டுக்குக் கொண்டுவருவதில் பல்வேறு நாடுகளால் சிக்கல்கள் நிலவுவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். துனீசிய பாதுகாப்பு அமைச்சர்ரும் பிரதி நீதி அமைச்சருமான ஃபர்ஹாட்த் அல்ஹர்ஷானி செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் “2014 ஜனவரி 14 உடன் முற்றுப் பெற்ற பின் அலி ஆட்சிக் காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் எம் நாட்டின் செல்வங்கள் தடையின்றி கடத்தப்பட்டன. எந்த நாடும் அந்தச் செல்வங்களை மீள அளிப்பதில் மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனினும் அங்கே ஒரு மந்தம்ம் நிலவுகின்றது.

உண்மையில் எவ்வளவு செல்வம் அவ்வாறு வெளிநாடுகளில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற மிக நுணுக்கமான புள்ளிவிபரங்கள் கூட எம்மிடம் இல்லை.” எனவும் கூறினார். அரபுப் வசந்தத்தில் முதலில் பதவியிழந்த பின் அலிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஸவூதி அரேபியா அடைக்கலம் கொடுத்தது. அவரும் அவரது குடும்பமும் பெருந்தொகையான செல்வங்களைக் கட்த்திக் கொண்டு சென்ற்றமை உடனே கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தூனிசியாவின் செல்வங்களை மீட்டெடுப்பதற்காகக் கூட்டப்படும் நான்காவது மாநாடே இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பில்லியன் கணக்கான செல்வங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக தூனிசிய தகவல்கள் கூறுகின்றன. இவற்றுள் லெபனான் மாத்திரம் 29 மில்லியன் டொலர் செல்வத்தை திருப்பிக் கொடுத்துள்ளது. அத்தோடு சுவிஸ் வங்கிகளில் 60 மில்லியன் ஃபிராங்குகளுக்கு மேல் பதுக்கப்பட்டுள்ள்ள செல்வங்களை தூன்னீசியாவுக்குக் கொடுக்க இணங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here