“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” -மாபெரும் ஆர்ப்பாட்டம்

0
1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” மக்கள் குரல் என்ற ஆர்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றது. கொள்ளுப்பிட்டி லிபேட்டிக் சுற்றுவடத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

அரசமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தமையை பிரதானமாகக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் வெள்ளமாக அணிதிரண்டிருந்தனர்.

இதேவேளை இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டத்துக்கெதிராக கறுவாத்தோட்டை பொலிஸார் நீதிமன்றில் கொண்டுவந்த தடை உத்தரவை நீதவான் நிராகரித்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்துக்கு நிபந்தனையுடனான அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

#SaveDemocracy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here