ஜனாதிபதி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை

0
1

ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் பெயரில் ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணிப்பதில் அரசுக்குச் சொந்தமான 3 கோடி 39 இலட்சம் ரூபா நிதியைப் பாவித்தமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களில் இருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான கோதாபய ராஜபக்ஷவை உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்துள்ளது. சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விஷேட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளைத் தொடர முடியாது என்ற அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தாபயவின் கடவுச் சீட்டை அவருக்கு மீளவழங்குமாறும் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி சார்பில் பிணை நின்றவர்களுக்கும் பிணை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய அறுவர் தொடர்பிலுமான வழக்கு ஜனவரி 09 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here