ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பான வழக்கு 13 ஆம் திகதியில்

0
1

கொரோனா தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவர்களது சமய நம்பிக்கைக்கு மாற்றமாக எரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் 13 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கொரோனா தொற்றினால் இறக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களாலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் திங்களன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தமது பக்க நியாயங்களை முன்வைத்ததன் பின்னர் வழக்கு விசாரணை 13 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களை மண்ணுக்குள் புதைப்பதனால் பூமிக்கடியில் உள்ள நீர்மட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படலாமென புவியியல் பேராசிரியர் மெத்திக விதானகே உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here