ஜிந்துப்பிட்டி கொரோனா சமூகப் பரவலல்ல

0
3

கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வந்த கப்பல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவருடன் தொடர்பு வைத்திருந்த 154 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்ததன் பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதகாலத்தில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு வெளியில் இனம் காணப்பட்ட முதல் கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டாலும் இது சமூகப் பரவல் அல்ல என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here