ஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளுக்கு 100 பேர் வரை அனுமதி

0
0

முஸ்லிம் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கும் ஜும்ஆத் தொழுகைக்குமென வரையறுக்கப்பட்டிருந்த 50 பேர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 22 ஆம் திகதி சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் எனவும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட் 19 ஐத் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளிக்கான ஒரு மீட்டர் தூர அளவைப் பேணி பள்ளிவாசலின் இட அளவைப் பொறுத்து கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும், தேவையைப் பொறுத்து கூட்டுத் தொழுகையை பல தடவைகளில் அமைத்துக் கொள்ள முடியும் எனவும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர்களுள் ஒருவரான விஷேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சும் வக்பு சபையும் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here