ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

0
0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரை கைது செய்யுமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தடையை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 2 வாரத்திற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாது வெளிநாடு சென்றிருந்தார்.
வெளிநாடு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, குறுந்துவத்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here