டோஹாவிலிருந்து சவூதி கோடீஸ்வரரின் தொலைக்காட்சி அலைவரிசை

0
1

சவூதி கோடீஸ்வரரின் தொலைக்காட்சி அலைவரிசை டோஹாவிலிருந்து ஒளிபரப்பை ஆரம்பிக்கின்றது

சவூதி கோடீஸ்வரரும் இளவரசரருமான அல் வலீத் பின் தலாலின் புதிய செய்மதி தொலைக்காட்சி  சேவையொன்று கட்டாரின் தலைநகர் டோஹாவிலிருந்து தனது சேவைகளை வழங்கவுள்ளது. பஹ்ரைனின் தலைநகர் பனாமாவில் இயங்கி வந்த இத்தொலைக்காட்சி சேவை, கடந்த ஆண்டு அங்கு தடைசெய்யப்பட்டது. தற்போது கட்டாரிலிருந்து அதன் சேவைகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டார் அரசாங்கத்தோடு இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இளவரசர் தலால் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு அலைவரிசை நிகழ்ச்சியொன்றில் இடம் வழங்கியமையே அங்கிருந்து சேவை நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பஹ்ரைனில் தகுந்த அனுமதிப் பத்திரங்கள் எதனையும் பெறாத நிலையிலேயே இவ்வலைவரிசை இயங்கி வந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here