தனது இரு தீவுகளை சவூதிக்குத் தாரைவார்த்த எகிப்து

0
0
செங்கடலில் சவூதிக்கும் எகிப்துக்கும் மத்தியிலுள்ள எகிப்துக்கு சொந்தமான இரு தீவுகளை சவூதிக்குத் தாரைவார்க்கும் தீர்மானமொன்றுக்கு சீசியின் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. செங்கடலின் கேந்திர முக்கியத்துவமுள்ளதாகக் கருதப்படும் இரு தீவுகளையும் தாரைவார்த்ததன் பின்னர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலதரப்புப் பொதுமக்களும் கெய்ரோ வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கைகலப்புக்கள் ஏற்பட்டிருந்தமையை சர்வதேச ஊடகங்கள் பதிவுசெய்திருந்தன. தய்ரான் மற்றும் ஸன்பாரி ஆகிய குறித்த இரு தீவுகளையும் சவூதிக்கு அளிப்பதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தை கடந்த வருடம் மன்னர் ஸல்மானின் எகிப்து விஜயத்தைத் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. இதற்குக் கைமாறாக சவூதி எகிப்தில் பல பில்லியன் முதலீடுகள் மற்றும் இலகு கடன்களை அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here