தான் செய்தது சரி என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கிறார்

0
1

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்துக்கு முன்னர் மாவில்லு. வெப்பல், மறிச்சுக்கட்டிக் காணிகள் அரச காணிகளாகவே இருந்தன. வனப்பகுதிகளாக இருக்கவில்லை. அது காடாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவுமில்லை. தற்போது வர்த்தமானியில் இது காடாகப் பிரகடனப்படுத்த முன்னர் 14 நாட்கள் முன்னறிவித்தல் வழங்க்கபட்டிருக்க வேண்டும். இந்தப் பிரதேசத்தில் ஏதும் நிலம் காடாகப் பிரகடனப்படுத்தப்படுவதாக இருந்தால் அது தொடர்பில் இந்தப் பிரதேசத்தின் அரசியல்வாதிகள், பொதுமக்கள், அரசாங்க அதிபர்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும என நாங்கள் மாவட்ட அபிவிருத்திக் கமிட்டி (DCC) கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம்.

இந்த முடிவின்படி ஜனாதிபதியின் செயலாளர் செயற்படவில்லை. எந்த அபிவிருத்தி முயற்சிகள் நடப்பதாக இருந்தாலும் அனைத்து அரசாங்க திணைக்களங்களும் இந்த DCC இன் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அவரே இதனை மீறியுள்ளார். அதிலும் மார்ச் 27 ஆம் திகதி வரை காலக்கெடு விடுக்கப்பட்ட அறிவித்தல் தந்தாலும் இது தாடர்பான முறைப்பாடுகள் வைப்பதற்கு அவகாசம் வழங்காமல் மூன்று நாட்கள் முன்னதாகவே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டு விட்டது.

முஸ்லிம்களின் காணிகள் பெறிக்கப்ட்டது தொடர்பில் பல சட்டவிரோத செயற்பாடுகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக நான் பல வழக்குகளைத் தொடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றேன். இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும் நான் ஜனாதிபதியுடன் கதைத்து நிலைமைகளை விளங்கப்படுத்தினேன். ஆனாலும் அவர் செய்த்து சரி என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார். இதனால் எல்லோருமாக இணைந்து இதற்கு அழுத்தம் கொடுத்தால் தான் இழந்த காணிகளை நாங்கள் மீளப் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here