திலாரா பேகத்தின் கனவில் வரும் தீயில் எறிந்த குழந்தை

0
0

எனது குழந்தையை தீப்பந்தத்தில் எறிவதை கண்ணுற்று வேதனையடைந்தேன் – மியன்மார் அகதிப் பெண்

மியன்மாரின் ரெக்கைனிலிருந்து பங்களாதேஷுக்கு அகதிகளாக வந்தவர்களுள் திலாரா பேகமும் ஒருவர். அவர் மியன்மார் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது தனது கைக் குழந்தையையும் சில தட்டு முட்டு சாமான்களையும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறியபோது, இராணுவத்தினர் அவரை இடைமறித்து கையிலிருந்த குழந்தையை உருவித் தீயில் எறிந்தனர். இக்கொடூரமான காட்சி கனவில் வருவதனால் தூக்கத்தில் அலறும் நிலைக்கு அவர் உட்பட்டுள்ளதாக திலாரா பேகத்தின் உறவினர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

இது போன்ற நூற்றுக்கணக்கான காட்சிகள் இன்றுவரை மியன்மாரின் ரெக்கைன் மாநிலத்தில் இடம்பெற்று வருகின்றன. மியன்மார் இராணுவத்தோடு முக் இனத்தவர்களும் சேர்ந்தே இக்கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பட்டமான இந்த இனச் சுத்திகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here