தீர்வுகளைத் தேடி வடக்கில் அநாதரவாய் ஒரு சமூகம்

0
0

 – பீ.எம். முஜீபுர் ரஹ்மான் –

வட மாகாணத்தில் நிரந்தரமாக வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி வாரத்தில் வலுக் கட்டாயமாக புலிகளின் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டார்கள். இவ் வருடத்துடன் 26 வருடங்களையும் தாண்டி பெரும்பாலானவர்கள் இன் னும் அகதி முகாம்களிலும், ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வெளியேற்றம், வரலாற்று ரீதியாக காணப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கிடையே இருந்த ஒற்று மையை பலமாகச் சீர்குலைத்தது. இரு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வில் பாரிய விரிசலை இது ஏற்படுத்தியது. தற்போது, இச்சமூக வேறுபாடுகள் இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 26 வருடமாக வாழ்வியலை இழந்து, ஏக்கங்களுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் வாழும் இம்மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவர்களில் 25 வீதமானவர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறியுள்ளார்கள். ஏதோ விதத்தில் தங்களது வாழ்வியலை முடியுமான வழிகளில் வடிவமைத்துள்ளார்கள். இன்னும் 25 வீதமானவர்கள் வெளி யேற்றத்தின் பின்னர் வடிவமைத்துள்ள இடங்களில் தங்களது வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டார்கள்.

மிகவும் பரிதாபமான நிலையில், 50 வீதமான ஏழைகள், நடுத்தர குடும்பத்த வர்கள் இன்னும் பாரிய பிரச்சினை  களை எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் புத்தளம் போன்ற வெளியேற்றத்தின் பின்னர் வாழ்கின்ற இடங்களிலும் வாழ முடியாமல், தங்களது சொந்த இடத்திலும் வாழ முடியாமல் நாடோடிகளாக அங்கும் இங்குமாக ஓட்டத்திலேயே திரிகிறார்கள். இவர்களின் இச்செயற்பாட்டினால் இவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. சுமார் 50 வீதமான பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் பரிதாபமாகக் கழிகிறது.

26 வருடங்கள் முடிந்துவிட்டன. 27 ஆவது வருடம், 28 ஆவது வருட நினைவு என்று செல்வதற்கு அப்பால், இந்த மக்களை நிரந்தரமாகக் குடியமர்த்து வதற்கு முயற்சிப்பது சமூகத்தின் முதன் மையான பிரச்சினையாகும்.

வெளியேற்றமும் தற்போதைய வாழ்வும் குறித்து மக்கள் கருத்து

“1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் 24 மணித்தி யால குறுகிய கால அவகாச அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட் டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஆயுதமுனையில் பலவந்தமாக வெளியேற்றியமை ஓர் இனச் சுத்திகரிப்பு, யுத்தக் குற்றமாகும் என்பதை அரசாங்கம் பாராளுமன்றத் தில் அறிவிப்பதோடு, அதனை வர்த்த மானியிலும் அறிவிக்க வேண்டும். இப் பலவந்த வெளியேற்றத்தை சர்வதேச சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். இப் பலவந்த வெளியேற்றம் குறித்து விஷேட நீதிமன்ற விசாரணை ஒன்றும் மேற் கொள்ளப்படவேண்டும்.”

“1990 ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் இம்மக்கள் பல பாதிப்புக் களைச் சந்தித்துள்ளார்கள். அவர்களில் பலர் காணாமல் போயுள்ளார்கள். இன்னும் சிலர் புலிகளால் பலவந்தமாக கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்கள் தொழுகையில்  இருந்தவர் களையும் சுட்டுக்கொன்றார்கள்.  (மன் னார் றஸூல் புதுவெளியில்)  மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட முஸ்லிம் செல்வந்தர்களை பலவந்தமாக கடத்திச் சென்று பெருந்தொகைப் பணத்தைப் பறித்துள்ளார்கள். முக்கியமான முஸ்லிம் கல்வியாளர்களையும், செயற்பாட்டாளர்களையும், கடத்திச் சென்று சிலரை சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இவை மனிதாபிமான சட்டத்திற்கும், சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கும், எதிரான யுத்தக் குற்றமாகும். இக்குற்றங் கள் விசாரிக்கப்பட்டு, உண்மைகள் கண் டயறியப்படுவதோடு, 26 வருடங்களுக் கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.  சர்வதேச நிபந்தனைகளுக்கு அமைவான நஷ்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும்.”

“நான் ஒரு வியாபாரியாக இருந் தேன். 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு சுமார் 15 நாட்க ளுக்கு முன்னர் கூட்டம் ஒன்றிற்கு வரு மாறு என்னை கூட்டிச் சென்றார்கள். அங்கு சென்ற என்னை பலவந்தமாக சிறையில் பிடித்து அடைத்தார்கள். சில நாட்கள் என்னை காட்டிற்குள் அடைத்து வைத்திருந்தார்கள். பின்னர் 1500 ரூபா மாத்திரம் தந்து என்னை அனுப்பி விட்டார்கள்.”

“நான் விடுதலைப் புலிகளின் சிறை யில் அடைபட்டு இருந்தபோது எங்க ளது மக்கள் (முஸ்லிம்கள்) சொந்த  ஊரை விட்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அங்கு அறிந்து கொண்டேன். வெளியேற்றத்தினால் எனது கோடிக் கணக்கான சொத்துக்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. எல்லா வகையிலும் இழப்புக்களையே சந்தித்தோம். வெளியேற்றம், சொத்தழிப்பு என்ற காரணத்தினால் எனது மகன் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு மனநோயாளியாகவுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் செய்து வருகிறேன். ஆனால் இன்றுவரை குணமாகவில்லை.”

“சொந்த இடத்தை விட்டு வெளி யேற்றப்பட்டு பல தொழில்கள் செய்து பார்த்தேன். ஒன்றுமே சரிவரவில்லை. இப்போது வயதாகிய நிலையில் கஷ்டத் தோடு வாழ்கிறேன். இறைவனின் உதவி யால் எனது ஒரு சில பிள்ளைகள் அவர்களது முயற்சியால் படித்து உத்தியோகத்திலும் இருக்கிறார்கள். அவர் களின் சிறு உதவியினாலேயே நான் வாழ்க்கை நடத்துகின்றேன்.”

“இப்போதுதான் எங்களது சொந்த இடங்களுக்கு வந்துள்ளோம். எங்கள்  சொந்த காணிகள் எல்லாம் காடுகளாக மாறியுள்ளன. எங்களது காணிகள் மிக வும் பெரிய வனாந்தரமாகவுள்ளது. அத்துடன் வீடுகள் எல்லாம் உடைக்கப் பட்டுள்ளன. எனது காணியும், கடையும், கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அதற்குள் முகாம் அமைத்துள்ளார்கள். அதற்குள் போகவோ, பார்க்கவோ முடியாத நிலையில் மிக மன வேதனையில் இருக்கின்றேன். அக் காணிக்கான உறுதிப்பத்திரம் உள்ளது.

கடந்த அரசாங்கத்தின்போது  பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அவர்கள் வந்தபோது, எங்களது சொந்தக் காணிகளை ஒப்படைக்குமாறும், கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் கோரி அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தோம். உடனே அமைச்சரின் உத்தரவின் பேரில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாட்களாக பொலிஸ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். எங்களது காணிகளை அமைதியான முறையில் கேட்டது குற்றமா? அவ்வாறு பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்குமா? அவர்கள்  ஏன் கைதுசெய்யப்பட்டார்கள் என்ற உண்மை தெரிய வேண்டும்.

அத்துடன் எனது இன்னொரு கடை 2007 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. எங்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து பாதிக் கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும்.”

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கென தனியான அலுவலகம் ஒன்று உருவாக்கப்படாமை இம்மீள்குடியேற்றத்திற்கான பிரதான தடையாக உள்ளது. மேலும், அவ்வலுவலகத்தினூடாக இவர்களின் மீள்குடியேற்றத்தை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண மக்களுடன் கலந்துரையாடியபோது பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களைக் கூறலாம்.

 1. மீள்குடியேற்றம் – மீள்குடியேற்றத்தைப் பாதிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

புத்தளம் – மன்னார் வீதி: நீண்ட வரலாற்றைக் கொண்ட இவ்வீதி பாவ னைக்காக திறந்து வைக்கவில்லை. இப் பாதை உயர் நீதிமன்றத்தில் வழக்கி லுள்ளதால் இவ்வழக்கு முடிவுறும்  வரை மக்கள் காத்திருக்கிறார்கள். இவ் வீதி இம்மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய  செல்வாக்குச் செலுத்துகிறது.

சுகாதாரம்: போதிய ஆஸ்பத்திரி வசதி கள் இல்லை. அத்தோடு, ஏனைய அத்தி யாவசிய பொருட்கள் இன்மை. விஷேட மாக வைத்தியர்கள் இல்லை. இவை படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும்.

கல்வி: மீள்குடியேறியுள்ள பிரதேசங் கள் கல்வியில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. சிலர் புத்தளம்    மற்றும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்த  பிரதேசங்களிலேயே வாழ்கிறார்கள். அவர்களிலேயே பெரும்பாலான ஆசிரி யர்கள் இருக்கிறார்கள். அவர்களின் இடமாற்றத்தை வடமாகாண சபை ஏற்றுக் கொள்வதில் பாரிய தாமதம்     ஏற்படுகிறது.

அத்தோடு, மீள்குடியேறுவதற்காக தங்களது காணிகளில் வளர்ந்துள்ள காடுகளை அழிப்பதற்காகப் பெற்றோர் கள் பிள்ளைகளை புத்தளம் மற்றும் தற்காலிகமாக வாழ்கின்ற இடங்களில் விட்டு விட்டு வரவேண்டிய நிலை ஏற் படுகின்றது. எனவே, அப்பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகின்றது.

அரச நிருவாகம் (அரசியல் மற்றும் ஏனைய தலையீடு): அரசியல் தலை யீட்டினால் இம்மக்களுக்கு நியாயமான முறையில் வீட்டுத் திட்டமோ, ஏனைய சலுகைகளோ கிடைப்பதில்லை.

காணி விவகாரம்: காணிப் பங்கீட் டில் பாரபட்சமாக நடந்து கொள்ளப் பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற னர். அத்தோடு, 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்ப காணிகள் வழங்க வேண்டிய நிலையில், காணிகள் வழங்குவதில் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டப்படு கின்றது.

அத்தோடு, இராணுவ, கடற்படை, பொலிஸ்  மற்றும் காடுகளுக்காக, விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தொழில் பிரச்சினை: இந்திய மீனவர் களின் வருகையினால், இலங்கை மீன வர்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின் றார்கள். அத்தோடு, இன்னும் பாஸ் நடைமுறையில் உள்ளமையால், வட மாகாணத்தில் மீன்பிடியில் ஈடுபடும் முஸ்லிம் மீனவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இப்பிரச்சினையை உரிய அரச அதிகாரிகளிடமும் முறை யிட முடியாத பரிதாபமான நிலையில் முஸ்லிம் மீனவர்கள் வாழ்கிறார்கள்.

மேலும், வடக்கின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ் கிறார்கள். இவ்விவசாயிகள் பாரிய பிரச் சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அதா வது, நீர்ப்பாசனம் இன்னும் சீராக வடி வமைக்கப்படவில்லை. அத்தோடு, அர சாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானி யங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள்.

முஸ்லிம்கள் மண் அகழ்தல், காட் டுத் தொழிலை செய்வதில் பாரிய கட்டுப்பாடுகள். ஆனால், ஏனையவர் கள் மண் அகழ்தல் மற்றும் காட்டுத் தொழிலை தாம் விரும்பியவாறு மேற்கொள்கிறார்கள்.

இவ்வாறான விடயங்கள் இம்மக்க ளின் மீள்குடியேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் அகதி முகாம்களில் வாழ்ந்த   இவர்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தங்களது தாயக பூமிக்கு மீள்குடியேறுவதற்காகச் சென்றால் அங்கு பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்கினர்.

26 வருட அகதி வாழ்வு நினைவு கூரப்படுகின்ற இந்நேரத்திலாவது இவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? சுதந்திரமாக தொழில்களை மேற்கொள்ள முடியுமா? என அம்மக்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த நினைப்பிலேயே அங்கும் இங்குமாக ஓட்டத்திலும், தடுமாற்றத்திலும் வாழ்கிறார்கள்.

மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் அபிவிருத்தித் திட்டங்களிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான வீட்டுத் திட்டம் எந்த சீருமில்லாமல் வழங்கப்படுகிறது. அவ்வீடுகள் யார் யாருக்கு வழங்கப்படுகின்றன, என்ன வழிமுறையில் வழங்கப்படுகின்றன என்பது குறித்து அம்மக்களுக்கே தெரியாது.

பரிந்துரைகள்

 1. வடமாகாண முஸ்லிம் மக்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்ற உண்மை கண்டறியப்பட வேண் டும். அவர்களுக்கான நீதி சர்வ தேச மயப்படுத்தப்பட வேண்டும்.
 2. பலவந்த வெளியேற்றம் ஓர் இனச் சுத்திகரிப்பு, யுத்தக் குற்றம் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானது என்பதை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 3. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து விசேட நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
 4. காணாமற் போனோர் அலுவலகத் தில் முஸ்லிம்களுக்கு தனியான பகுதி வேண்டும்.
 5. நஷ்டஈடு அலுவலகத்திலும், முஸ்லிம்களுக்கு தனியான பகுதி வேண்டும்.
 6. சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண் டும்.
 7. அலுவலகங்கள் அமைக்கப்படும் போது முஸ்லிம் மக்களுடைய பிரதி நிதித்துவம் இருக்க வேண்டும். மக்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இடங்களில் அலுவலகங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
 8. வடமாகாண சபையினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் யாவும் இன, மத வேறுபாடின்றி சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். சிறப்பான குடியேற்றத் திட்டங்கள் செய்து தரப்படல் வேண்டும். அத்துடன் மீளக்குடியமர்வதற்கான போதுமான கால அவகாசம் கொடுக்கப்படல் வேண் டும்.
 9. மீளக்குடியமர வரும்போது அவர்கள் ஏற்கனவே இங்கு இருந்தவர்கள் மாதிரியே பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு கணிக்கப்படல் வேண்டும்.
 10. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வைத்தியசாலைகள், நிரந்தர வைத்தியர்கள், Ward வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
 11. முஸ்லிம்களுக்கான நஷ்டஈடு என் பது சர்வதேச ரீதியாக வழங்கப் படல் வேண்டும். 1990 ஆம் ஆண்டு இழப்புகளுடன் இடம்பெயராமல் இருந்தால் எவ்வளவோ உழைத்தி ருக்க முடியும். இவற்றையெல்லாம் கணக்கிட்டு நஷ்டஈடுகளைத் தர வேண்டும்.
 12. மக்கள் செறிந்து வாழும் இடங்களிலிருந்து இராணுவங்களை வெளியேற்ற வேண்டும்.
 13. பத்து வருடங்கள் இருந்தால், அவ்விடத்தில் இருப்பவர்களுக்கே சொந்தம் என்ற சட்டம் முஸ்லிம் மக்களுக்குப் பொருந்தாது. இவை மாற்றியமைக்கப் பட வேண்டும்.
 14. முஸ்லிம் மக்களுடைய பூர்வீகமான சொந்தக் காணிகளிலுள்ள இராணுவங்கள் வெளியேற்றப்பட வேண்டும். புதிய குடும்பங்களுக்கான காணி வழங் கும் திட்டங்களையும் நடைமுறைக்கு கொண்டு வருதல் வேண்டும். பூர்வீகக் காணிகளுக்கு உறுதிகள் இல்லாத காரணத்தினால் அயலிலுள்ள மக்களது உறுதிப்படுத்தல்களுடன் காணிக்கான உறுதிகள் வழங்க வேண்டும். மக்க ளுடைய காணிகளை அரசாங்கம் எடுத்திருந்தால் காணிக்குப் பதிலாக  இன்னொரு காணி அல்லது அதற்கான இழப்பீகள் வழங்க வேண்டும்.
 15. அரச அதிகாரிகள் ஊழல்கள் செய்யும்போது அது தொடர்பாக விசாரணை செய்வதற்கான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.
 16. பெண்கள் தொடர்பான பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு துரித கதியில் விசாரணை செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.
 17. நீதிப்பொறி முறைக்கான விசாரணை அலுவலகத்தில் முஸ்லிம் மக்களது காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகள் உள்வாங்கப்படல் வேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியப்பட வேண்டும்.
 18. எல்லா அமைப்புக்களுக்கும் சேர்த்து தாய் அமைப்பு ஒன்று ஏற்படுத்தல் வேண்டும். அமைப்புக்களிடையே பரஸ்பர உறவினை ஏற்படுத்தல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here