துருக்கிய புதிய பிரதமராக இல்டிரிம்!

0
2

துருக்கியின் அதிபராக இருக்கின்ற ரஜப் தையிப் அர்துகானின் நெருங்கிய ஆதரவாளர் பினாலி இல்டிரிம் (60 வயது) ஆளும் ஏ.கே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பினாலி இல்டிரிம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர் பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

CjElGdYWsAEJIAcதுருக்கியின் அரசியல் சாசனத்தை மாற்றி அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதே அவரது பணி என பினாலி இல்டிரிம் கூறியுள்ளார்.

துருக்கிய அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் அகமட் தாவுதொக்லு பதவி ராஜினாமாவின் பிறகு இந்த நகர்வு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குர்து இனத்திற்கு மேல் தொடர்ந்து எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளையும் இல்டிரிம் ஆதரித்திருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆறு மணியளவில் கூடிய கட்சிக் கூட்டத்தில் இல்டிரிம் ஏ.கே கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 65 ஆவது அரசை ஸ்தாபிக்கும் பொறுப்பு அதிபர் அர்துகானினால் இவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here