தென் கொரியாவில் கொரோனாவின் இரண்டாவது படையெடுப்பு

0
0

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கொரோனா மீண்டும் துரத்தியடிக்கும் நிலை தென்கொரியாவில் உருவாகியிருக்கிறது. கொரோனா தொற்றி குணமடைந்த 91 பேர் அங்கு மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா மீண்டும் தொற்றுவது அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் மீளவும் இந்த வைரஸ் உயிர்பெற்றுள்ளது என தென் கொரியா தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றி சுகமடைந்ததன் பின்னர் மீண்டும் தொற்றுவது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிலையத்தின் நியமங்களின்படி, கொரோனா தொற்று இல்லை என்ற இரண்டு மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்ட பின்னரே ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வெளிச் செல்ல முடியும். கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டு 24 மணித்தியாலயத்தின் பின்னர் இன்னொரு அறிக்கை அதனை உறுதிப்படுத்தி வழங்க வேண்டும்.

புதிய ஆய்வுகளின்படி, நோய் தீவிரமடைந்ததிலிருந்து பூரண சுகமடையும் வரை 14 நாட்கள் எடுக்கின்றன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவரீதியாக நோயாளி குணமடைந்திருந்தாலும் கொவிட் பரிசோதனைகளில் வைரஸ் தொடர்ந்தும் உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு காலமாக உடலில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என்பதனைக் கண்டறிவதற்காக நோயாளியைத் தொடர்ந்தும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொவிட் புதுவகையான வைரஸ் என்பதனால் இதனுடைய இயல்பினை அறிவதற்கு ஏனைய வைரஸ்களைப் பற்றியும் அறிய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here