தேசிய சறுக்கல் போட்டி 26, 27 ஆம் திகதிகளில்

0
3

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களின் ஆதரவுடன் சிறிலங்கா ஸ்போர்ட்றெயிசின் (எல்.எஸ்.ஆர்) ஏற்பாட்டில் சர்வதேச சுற்றுலாத்துறை தினத்தை முன்னிட்டு நெசனல் சபரிங் நிகழ்வு ஒன்றை அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அறுகம்பையில் எதிர்வரும் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  


சுர்வதேச ரீதியாக ஏற்பட்டிருந்த கொவிட் 19 தொற்றுக் காரணமாக சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை என்பன நின்றுபோயிருந்த நிலையில் இலங்கையில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் இப்போட்டிகளை திறந்த போட்டிகளாக நடாத்த ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


இப்போட்டிகள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடக மாநாடு ஒன்று நேற்று முன்தினம்  (11) கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இதன்போது சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here