தேசிய மக்கள் சக்தியே குறைந்த செலவில் தேர்தல் பிரச்சாரம்

0
1

தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒக்டோபர் 14 முதல் 31 வரையான 17 நாட்களில் பிரதான வேட்பாளர்கள் மூவரும் தேர்தல் பிரச்சாரத்துக்கென செலவழித்துள்ள தொகை 100 கோடி ரூபா என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் மதிப்பிட்டுள்ளது.

மொத்தமான 100 கோடி ரூபாவில் கோதாபய ராஜபக்ஷ போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே அதிக அளவில் செலவழித்துள்ளது. அந்தக் கட்சி முதல் 17 நாட்களிலும் 57 கோடி ரூபாவை (ஒரு நாளைக்கு 3 கோடி 35 இலட்சம்) தேர்தல் பிரச்சாரங்களுக்காகச் செலவழித்துள்ளது. மொட்டுக் கட்சியின் ஒரு நாள் செலவை விடவும் மூன்றில் ஒரு பங்கு குறைவான தொகையை அநுர குமார திசாநாயக்கவை வேட்பாளராகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி செலவழித்துள்ளது. அவர்கள் தேர்தலுக்கென ஒக்டோபர் 31 வரை செலவழித்த தொகை ஒரு கோடி 10 இலட்சம் ரூபாவாகும். சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணி 37 கோடி ரூபாவை செலவழித்துள்ளது. தாம் மதிப்பிட்ட அளவை விட இது அதிகமாகவும் இருக்கலாம் எனவும் நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக செலவினைக் கணக்கிடும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரிய போதும் எந்தவொரு கட்சியும் தம்முடன் ஒத்துழைக்கவில்லை எனவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here