தேசிய மரபுரிமையானது திரிபீடகம்

0
1

கௌதம புத்தரின் போதனைகள் அடங்கிய மூலநூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (05) மாத்தளை அலுவிகாரையில் நடைபெற்றது. 2300 வருடங்களுக்கு மேலாக பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட பௌத்த மக்களால் திரிபீடகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1500 க்கு மேற்பட்ட பௌத்த மதத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் பூரண அரச அனுசரணையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மூன்று பீடங்களை உள்ளடக்கிய தேரவாத திரிபீடகம், கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நடந்த மகிந்த தேரரின் வருகையுடன் இலங்கை வசமாகியது. இலங்கையின் மகா சங்கத்தினரால் வாய் மொழியூடாகப் பாதுகாக்கப்பட்ட இந்தத் திரிபீடகம், கி.மு. முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னனுடைய காலப்பிரிவில் மாத்தளை அலுவிகாரையில் பனை ஓலைகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டது. பின்னர் இவை 1956 ஆம் ஆண்டில் பௌத்த வருடம் 2500 பூர்த்தியாவதை முன்னிட்டு அச்சிடப்பட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் பாதுகாக்கும் நோக்கிலேயே இப்பொழுது அது தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. திரிபீடகத்தின் மறு பதிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் புத்தசாசன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, அன்றைய தினம் நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் இந்த நிகழ்வையொட்டி பௌத்த கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன வேண்டி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here