தேர்தல் சீர்திருத்தங்கள் நியாயமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருக்குமா?

0
0

10848042_868794339807907_8409809354626042807_n

பி.எம்.முஜீபுர் ரஹ்மான்

இலங்கை அரசியல் வரலாற்றில் தற்போதுள்ள அரசியல்கள நிலவரம் போன்று என்றும் இருந்ததில்லை. இது முழு நாட்டுக்குமே சாதனைக் காலமாகத்தான் இருக்கின்றது. அதாவது, தேர்தல் சீர்திருத்தங்கள், எல்லை நிர்ணயம் செய்தல் (தொகுதிகள் பிரித்தல்), எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுதல் போன்ற முக்கிய விடயங்கள் அரசியலில் பெரும் சிக்கலான பக்கங்களைப் புரட்டியுள்ளன.

 

பெரும் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையிலேயே இவ்விடயங்கள் குறித்து வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஏனைய சிறுபான்மைக்கட்சிகள் இன்னும் சரியான நிலைப்பாடின்றி முதன்மைக் கட்சிகளை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

அதாவது அரசியலமைப்பு சீர் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்கின்ற நிலையில் இருக்கிறது. அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்கின்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அரசாங்கத்திற்குள் இருக்கும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளுக் கிடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது அவை படிப்படியாக அம்பலத்திற்கு வருகிறது.

இந்நிலையிலேயே தேர்தல் சீர்திருத்தம் குறித்தும் பேசப்படுகிறது. இதில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு என்ன? அரசியலில் சிறுபான் மையாகவுள்ள கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தமிழ்க் கட்சிகள் இணைந்து முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

மேலும், பெண்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு குறித்துப் பேசுகிறார்கள். தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவம் குறையும் என பெண்கள் அமைப்புக்கள் கூறுகின்றன. எனவே, தற்போது நடைமுறைப்படுத்தப்படப் போகின்ற தேர்தல் முறை மாற்றத்தில் தங்களுக்கும் சம அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் குரலும் பரவலாக ஒலிக் கின்றது.

சிங்கள சமூகத்தில் சிறுபான்மையினராக வாழும் சாதியினரும் இவ்வரசியல் சீர்திருத்தத்தில் தங்களுக்கும் நியாயமான பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகிறார்கள். ஏனெனில், 1833 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு முதல் சுதந்திரம் வரையான காலத்தில் எண்ணிக் கையால் குறைந்த அனைத்து இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.

இவ்வாறு அனைத்து இனங்களையும் சமூகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் முறையாகக் காணப்பட்ட தேர்தல் முறையையும், நியமன முறையையும் 1978 ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலம் நீக்கியது. எனவே, மீண்டும் நடைமுறைப் படுத்தும் தேர்தல் சீர்திருத்தங்களின் தங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றனர். இது அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

ஆனால், விகிதாசாரத் தேர்தல், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ.ல.மு.கா, மலையக மக்கள் முன்னணி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறிய கட்சிகளின் பிரதி நிதிகள் பாராளுமன்றம் செல்ல உதவியது. 1989 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அதன் பயன்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பெருந் தோட்ட மக்களின் பிரதிநிதிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அத்தோடு சிறிய பல புதிய கட்சிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

இந்நிலையிலேயே, 250 பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட புதிய தேர்தல் சீர்திருத்தம் குறித்துப் பேசப்படுகிறது. இதில் 140 பேர் தேர்தல் தொகுதிகளிலிருந்தும், 80 பேர் விகிதாŒõர தேர்தல் அடிப்படையிலும், 30 பேர் தேசிய பட்டியல் முறையிலும் தெரிவு öŒ#யப்படுவார்கள் என்ற கலப்புத் தேர்தல் முறைமை பற்றியே பலரும் பேசுகின்றனர், இக் கருத்தே மிகப் பலமாகவும் உள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 160 தேர்தல் தொகுதிகளை, தற்போதைய தேர்தல் சீர்திருத்தத்தின் மூலம் 140 தேர்தல் தொகுதிகளாக குறைக்கவுள்ள னர். இத்தேர்தல் தொகுதிகளை எவ்வாறு எல்லை நிர்ணயம் செய்யப் போகிறார்கள்? இதில் சிறுபான்மையாக சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் தீர்க்கமான முடிவின்றி அங்கவாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஆழமான கருத்தின்மையாலும், அவ்வெல்லை நிர்ணயம் எவ்வாறு மேற்கொள்வது குறித்து தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வரைவது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here