நீர்வளத்துக்குப் பாதிப்பாம். மலையக மக்களின் காணிகளையும் வனப்பாதுகாப்புக்கு அபகரிக்க முயற்சி

0
0

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுவருகிறது. இந்தச் செயற்பாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகம் என அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன.

ஒரு பக்கம், 150 வருடங்களாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், மறுபுறம் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பெரும்பான்மையின மக்களுக்கு 20, 25 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் கிராமமே உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பான்மையினரின் உரிமைகள் மீறப்படாமல் அரசாங்கத்தால் அவை பாதுகாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.

இதேபோல போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாகக் கூறி மன்னார், சிலாபத்துறை முஸ்லிம்களின் காணிகளும் பறித்தெடுக்கப்பட்ட செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here