நேர்மைக்கு மகுடம் விருது வாபஸ்

0
0

2018 ஆம் ஆண்டு நேர்மைக்கு மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட டொக்டர் வஸந்த திஸாநாயக்கவின் விருதினை, விருதினை வழங்கிய டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் மீளப் பெற்றுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் வஸந்த திசாநாயக்கவின் விருது திருப்பி எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மேன்முறையீடு செய்வதற்கான அவகாசம் அவருக்கு வழங்கப்பட்ட போதும் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் அவருக்கான விருதை நாங்கள் திருப்பி எடுத்து விட்டோம் என டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் தெரிவித்துள்ளது.

நேஅபேக்ஷா வைத்தியசாலைக்கான உபகரணம் வாங்குவதற்காக நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கின்ற எம்.எஸ்.எம். மொஹமட் தொடர்பில் இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது பேஸ்புக்கில் முறையற்ற பதிவொன்றை இட்டிருந்தார். நேர்மையான அரச  அதிகாரிகளை கௌரவிக்கும் வகையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here