பரபரப்பாக நடைபெறும் தமிழக தேர்தலை புறக்கணித்த கிராமம்

0
0

இன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் முதல்வரைத் தீர்மானிக்கும் 232 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சித் தலைவர்கள், நட்சத்திரங்கள், குடிமக்கள் என அனைவரும் தங்களது வாக்குபதிவினை மும்முரமாக செலுத்தி வருகின்ற நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் வாக்குபதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட மிட்டகண்டிகை கிராமத்தில்,586 வாக்குகள் உள்ளன. அங்கு காலை முதல் ஒருவர் கூட வாக்குச் செலுத்த வரவில்லை.

கடந்த20 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் மிட்டகண்டிகை கிராம மக்கள் கூறுகின்றனர்.

வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here