பலஸ்தீனில் இரு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் -பென் கீ மூன்

0
2

காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை ஒரு கூட்டுத் தண்டனை என பென் கீ மூன் கடிந்துள்ளார். அவர் பதவி விலகிச் செல்லவுள்ள தருணத்திலேயே இக்கண் டனம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகையினால் காஸா வின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை மூச்சுத் திணற வைத்துள்ளது. அங்கு       சர்வதேச சமூகம் மேற்கொண்டு வரும் மீள்கட்டுமான நடவடிக்கைகளும் முடக் கப்பட்டுள்ளன என பென் கீ மூன் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலமைக்கு இஸ்ரேல் வகைகூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். காஸாவில் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் 50 வீத வேலையற்றோர் பிரச்சினை தலைதூக்கியுள்ளதையும் அவர் கூட்டிக்காட்டினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு தொடர்கின்றது.

“முற்றுகை, ஆக்கிரமிப்பு, இழிவு படுத்தல் என்பவற்றின் கீழ் காஸா மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை மிக வெளிப்படையாக நாம் பேச வேண்டும். பலஸ்தீனில் இரு நாடுகள் உருவாக்கப் பட வேண்டும். பழிவாங்கும் செயற்பாட்டை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நான் ஊக்குவிக்கின்றேன். வன்முறையின் அடிப்படைக் காரணங்களை நாம் இலகுவில் புறக்கணிக்க முடியாது. அதனால்தான் பலஸ்தீன இளைஞர்கள் ஆத்திரமடைகின்றனர்.”

காஸாவுக்கான தனது இறுதிப் பய ணத்தை முடித்துக் கொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரி வித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் முடிவடை கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here