பலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பிரதமர் விலகினாரா ?

0
0

பலஸ்தீன் மேற்குக் கரையில் எஞ்சியுள்ள பகுதிகளில் மூன்றில் ஒன்றுக்கும் அதிகமான பகுதி ஆக்கிரப்பு இஸ்ரேலினால் ஜூலை முதலாம் திகதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டதைக் கண்டித்து உலக நாடுகள் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் இலங்கை இதுவரை எந்தவித எதிர்வினையையும் காட்டாமலிருப்பது பலஸ்தீன் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தைப் போலன்றி அதற்கு முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் பலஸ்தீனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பேணி வந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னைப் பலஸ்தீனின் நண்பன் என்பதாகவே தேர்தல் மேடைகளிலும் சொல்லி வந்தார். 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனுக்கு விஜயம் செய்த போது அந்த நாட்டின் அதியுயர் விருதான பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பலஸ்தீன் தொடர்பில் அவர் ஐநா சபையில் எழுப்பும் குரலுக்கு மதிப்பளித்தே ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த விருதை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை முன்னிட்டு ரமல்லாவிலுள்ள தெருவொன்றுக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதி எனப் பெயரும் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் பலஸ்தீனின் பேரழிவாகக் கருதப்படுகின்ற மாபெரும் நிலக் கொள்ளை என வர்ணிக்கப்படுகின்ற இணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதக் குரலும் எழுப்பாமை பிரதமரின் பலஸ்தீன் தொடர்பான நிலைப்பாடுகளில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here