பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா மத்தியஸ்தம்?

0
3

இஸ்ரேல் பிரதமர் நெடன் யாஹுவுக்கு பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையிலான உத்தேச அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு ரஷ்யா விருப்பம் திரிவித்துள்ளதாக எகிப்திய ஜனாதிபதி ஸீஸி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் இவ் விருப்பத்தைத் தெரிவித்ததாக நேர்காணல் ஒன்றின் போது ஸீஸி தெரிவித்தார்.

பத்தாஹ் இயக்கத்திற்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள் களையப்படுவதோடு, ஹமாஸ்-பத்தாஹ் இயக்கங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என ஸீஸி கூறினார். புட்டின் தன்னுடனான உரையாடலில் பின்வருமாறு கருத்து வெளியிட்டதாக ஸீஸி தெரிவிக்கின்றார்.

“சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அகியவற்றோடு பேசுவதற்கும் நாம் தயார்” என புட்டின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here