பலஸ்தீன ஷுஹதாக்களை அவமானப்படுத்தும் அமெரிக்கா

0
1

CUNfz8yXAAArODX பலஸ்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் அழைப்பின் பேரில் அண்மையில் பலஸ்தீனுக்கான விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி பலஸ்தீன இன்திபாழா பற்றித் தெரிவித்த கருத்துக்களை ஹமாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. குறித்த விஜயத்தில் பலஸ்தீன இன்திபாழா நிகழ்வுகளை பயங்கரவாதச் செயலாக வர்ணித்து ஜோன் கெரி கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த விஜயம் தொடர்பில் ஹமாஸின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அபூ ஸுஹ்ரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் “அமெரிக்காவின் தீய எண்ணங்களை கெரியின் பேச்சுக்கள் காட்டுகின்றன. அவர்கள் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை முற்றாக ஆதரித்து பலஸ்தீனுக்கு எதிராக நிற்கின்றனர். அவரது இந்த விஜயம் வரவேற்புக்குரியதல்ல. பலஸ்தீன அதிகார சபை இந்த விஜயத்தை ரத்துச் செய்திருக்க வேண்டும். அவர்கள் எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். எமது ஷுஹதாக்களின் இரத்தங்களை அவமானப்படுத்துகிறார்கள்.” என்றார். இவ்விஜயத்தின் போது ஜோன் கெரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு, ஜ்னாதிபதி ரொபின் ரிஃபினை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குத்ஸ் பகுதியிலும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை ராமல்லாஹ்விலும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

– Siaaf –

CUv_Af5WEAAECth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here