பல்கலைக்கழக அனுமதி குறித்த இரண்டாவது பார்வை!

0
1

பல்கலைக்கழக அனுமதி குறித்து மாணவர்கள் அறிய வேண்டியவை

முதல் கட்டுரை :: http://www.meelparvai.net/?p=12968

பாடசாலை பரீட்சார்த்திகளாக பரீட் சைக்குத் தோற்றியவர்களைப் பொறுத்த வரை, பாடசாலை பரீட்சார்த் திகளால் வழங்கப்பட்ட தகவல்கள் சரியானவை என பாடசாலையின் ஆவணங்களின் படி அப்பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தனிப் பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றி யோர் தமது அனுமதிக்கான விண்ணப் பத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. பாடசாலை விலகல் சான்றித ழின் மூலப் பிரதி (Original of School Leaving Certificate)
  2. மாவட்ட தேர்தல் அலவல கத்திலிருந்து பெறப்பட்ட தேர்தல் தொகுதி இடாப்பின் பிரித்தெடுப்பு (Extracts of Electoral Register) உதார ணமாக 2014 ஆம் ஆண்டு தோற்றி யோருக்கு 2011, 2012, 2013, 2014 ஆம் ஆண்டுக்குரியவை அவசியம்.
  3. பிரதேச செயலாளரால் மேல் ஒப்பமிடப்பட்டு உத்தியோகபூர்வ முத் திரை இடப்பட்ட கிராம சேவகரின் சான்றிதழ் மூலப் பிரதி(Original of the Grama Sevaka Cetificate)

பின்வரும் மாணவர்கள் ஒரு பல் கலைக்கழகத்தில் அல்லது வளாகத்தில் அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் உள்வாரி மாணவர்களாக அனுமதி கோர தகுதியற்றவர்கள் ஆவர்.

க.பொ.த. உயர் தர பரீட்சையில் 3 தடவைக்கு மேல் தோற்றி யோர்.

  1. பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பல் கலைக்கழகத்தில் அல்லது வளாகத்தில் அல்லது நிறுவனத் தில் உள்வாரி மாணவர்களாக முதல் கற்கைநெறியொன்றை பதிவு செய்தவர்.

இலங்கையின் வேறு ஏதாவது பாராளுமன்ற சட்டத்தின் பிர காரம் -1978 ஆம் இலக்க பல் கலைக்கழக சட்டம் தவிர்ந்த- தாபிக்கப்பட்ட பல்கலைக்கழ கத்தில் முதல் பட்டநெறிக்காக உள்வாரி மாணவனாக பதிவு செய்தவர்.

உள்வாரி மாணவனாக ஒரு கல்விக் கல்லூரியில் அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பதிவுசெய்துள்ள மாணவன்.

முதலாவது பட்ட மட்டத்தில் (Bachelor Degree) பயிற்சிநெறி ஒன்றுக்காக உயர் கல்வி அமை ச்சின் மூலம் வெளிநாட்டுப் புலமைப் பரிசில் ஒன்றுக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்.

இலங்கை உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழுள்ள ஒரு நிறுவனத்தில் உயர் தேசிய டிப்ளோமாவுக்கு இட்டுச் செல் லும் கற்கைநெறிக்கு அல்லது தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையினரின் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தின் இயந்திரவியல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா போன்ற கற்கை நெறியொன்றை முழு நேர மாணவனாகப் பயில்வதற்கு பதிவுசெய்துள்ள மாணவன்.

முதலாவது பட்டமொன்றை அல்லது அது தொடர்புடைய தகைமையை மேலே 2, 3, 4, 5, 6 இன் தனிப்பிட்ட நிறுவ னங்களில் ஏற்கனவே பெற்ற மாணவர்கள்.

பல்கலைக்கழக அனுமதிக்காக பிழையான தகவல்களை வழ ங்கி, போலியான ஆவணங் களை சமர்ப்பித்த மாணவர்கள்.

இருந்த போதிலும் மேலே ஐந்தில் குறிப்பிடப்பட்ட உயர் கல்வி நிறுவன மொன்றில் பதிவு செய்துள்ள மாண வர்கள் பதிவுசெய்வதற்கான முடிவுத் திகதியிலிருந்து 60 நாட்களைக் கொண்ட காலமொன்றினுள் தமது பதிவை இரத்துச் செய்திருந்தால் மட் டுமே பின்னரான ஆண்டொன்றில் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையொன்றின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழக சட் டத்தின் பிரகாரம் ஒரு பல்கலைக் கழகத்தில் கற்கைநெறியொன்றுக்காக விண்ணப்பிக்க முடியும்.

மேலும் குறிப்பிட்ட காலப் பகுதி யினுள் தமது பதிவை மீளப் பெறாத வர்களும் அத்துடன் மேற்படி 5 இல் குறிப்பிட்ட நிறுவனங்களில் கல்வி யைப் பெற வெற்றிடமொன்றை நிரப்பு வதற்காக தெரிவுசெய்யப்படுகின்ற விண்ணப்பதாரிகளுக்கும் இச்சலுகை வழங்கப்பட மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here