பாடசாலைகளுக்கு விடுமுறை. உயர்தரப் பரீட்சை பற்றிய தீர்மானம் திங்களன்று.

0
2

பாடசாலைகள் யாவும் தரம் 11, 12, 13 மாணவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலின் பின் ஓகஸ்ட் 10 திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்துடன், க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதிகள் தொடர்பில் திங்கட்கிழமை (20) அறிவிக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இவ்வாறு மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலை விடுமுறையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தற்போது இராஜங்கனை மற்றும் வெலிகந்த பகுதிகளில் நிலவும் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற் கொண்டு அப்பகுதிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்பு பாடசாலைகள் திறக்கப்படாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 நாட்டின் ஐந்து மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதனாலும், மேலும் மூன்று பிள்ளைகளுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு பாடசாலைகளை நடாத்துவது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here