பாடசாலை இடைவிலகல் | மனித வள அபிவிருத்திக்குப் பெருந் தடை

0
34

கல்வி அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகும். ஒரு நாட்டின் பொருளாதார, சமூக அபிவிருத்தியின் அத்தி வாரமாகும். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகின் பல நாடுகள் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு பாரிய ளவு முதலீடு செய்கின்றன. கல்வித்  துறை முதலீடு ஒரு நாட்டின் எதிர்காலப் பலத்தைத் தீர்மானிக்கின்றது. பௌதிக வளத்தையும் மனித வளத்தையும் அதிகரிப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்ற பூகோள இலக்கை அடைவதற்கு நாடுகள் முயற்சிக்கின்றன.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் கல்வித் துறையில் பாரியளவிலான சாதனைகளை நிலைநாட்டி யுள்ளது. இலங்கையில் எழுத்தறிவு வீதம் 97 ஆகும். எவ்வாறாயினும், இலங்கை யின் கல்வித் துறையில் பாரிய பிரச்சினைகள் பல தொடர்ந்தும் இருந்து வரு கின்றன. தற்போது சைட்டம் நிறுவனத் திற்கு எதிராக நாளாந்தம் வீதி ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் பெருகி வருகின்றது. உயர் கல்வித் துறையில் பாரிய சீர்திருத்தம் ஒன்று அவசியம் என்று கல்வியியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையின் பாடசாலைக் கல்வி யில் எதிர்கொள்ளப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றே மாணவர் இடைவிலகல் ஆகும். 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 45,000 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். பெருந்தோட்டத் துறையில் ஆரம்பப் பாடசாலைகளில் சேரும் மாணவர்களில் 20 வீதமானோர் கல்வியைப் பூரணப்படுத்துவதற்கு முன்னர் இடைவிலகு கின்றனர். யுனிசெப் வெளியிட்டுள்ள பாடசாலை செல்லாத சிறார்கள் எனும் அறிக்கையில் இலங்கையில் பாடசாலைக்குச் செல்லும் வயது வந்தும் பாடசாலைக்கு சமூகம் தராத பிள்ளைகள் மற்றும் இடைவிலகுகின்ற பிள்ளைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.

முறைசார் கல்வியில் பாடசாலை முக்கிய பங்காற்றுகின்றது. வரையறுக்கப்பட்ட இலக்குகளையும் குறிக்கோள் களையும் கலைத் திட்டத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்குவதற்கு மாணவர்களின் முறையான வரவு அவசியம். இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளது. பாடப் புத்தகம், சீருடை, போக்குவரத்து போன்றன இலவசமாக வழங்கப்படுகின்றது.

கல்வித் துறைக்கான செலவீனங்கள் வருடாந்தம் அதிகரித்து வருகின்றது. எனினும், இலவசக் கல்வியின் அனு கூலங்களை எல்லா மாணவர்களும் முழுமையாகப் பெறுகின்றனரா என்பது கேள்விக்குறியே. ஏனெனில், கட்டாயக் கல்வி வயதான 5 முதல் 14 வயதினர் பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைக் கல்வியைப் பூரணப்படுத்தாம லேயே இடைநிற்கின்றனர்.

இலங்கை ஒரு வளர்முக நாடாக உள்ளபோதும் கல்வித் துறைக்கு பெருமளவு நிதியை செலவு செய்கின்றது. ஆனால், பாடசாலை இடைவிலகல் என்பது அரசாங்கத்தின் இந்தச் செலவீனங்களை வீண்விரயம் செய்கின்றது. உலகின் வேறு பல நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கைப் பாடசாலைகளில் இடைவிலகல் குறைவாகும். எனினும், முறைசார் கல்வியில் அது ஒரு பிரச்சினையாகவே வளர்ந்து வருகின்றது.

மரணம் அல்லது வேறு பாடசாலை களுக்கு இடம் மாறுதல் ஆகியன அன்றி வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காக பாடசாலைக் கல்வியைப் பூரணப்படுத் தாமல் மாணவர்கள் இடைநிற்பதையே இடைவிலகல் என வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றது.

2010 இல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் இடைவிலகல் குறித்த தனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தது. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 2005 இல் வெளியிட்ட அறிக்கையில் 60,000 மாணவர்கள் இடைவிலகியுள்ள தாகத் தெரிவித்தது. ஒடிட்டர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில், 2009 இல் 46,256 பேர் இடைவிலகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.

இடைவிலகலுக்கான காரணங்கள் பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றன. ஆய்வாளர்கள் அவற்றை மாணவர் சார்ந்தவை, பெற்றோர் சார்ந்தவை, பாடசாலை சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை என வேறுபடுத்துகின்றனர்.

கல்வியில் வழங்கப்படும் இலவச வாய்ப்புக்களைத் தாண்டி பெற்றோர் எதிர்நோக்கும் கல்விச் செலவீனங்கள்,

வறுமை,

வேலைவாய்ப்பு, ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல்,

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறை,

பௌதிக வளக் குறைப்பாடு, மாணவர் களைக் கவராத வகுப்பறைச் சூழல்,

ஆசிரியர்-மாணவர் தொடர்பிலுள்ள குறைபாடுகள்,

மாணவர் வசிக்கும் சமூக சூழலின் கலாசார சீரழிவு,

போதைவஸ்துப் பாவனை,

சகபாடிகளின் அழுத்தம்,

பெற்றோரின் அக்கறையீனம்

என இடைவிலகலைத் தூண்டும் பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவர்களின் போஷாக்கின்மை கூட இடை விலகலைத் தூண்டுவதாக ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இடைவிலகலுக்கு மோசமான விளைவுகள் உள்ளன.

தொழிற் தகைமையற்ற இளைஞர்கள் பெருகுகின்றனர்.

வேலையற்றோர் வீதம் அதிகரிக் கின்றது.

கீழ் வர்க்கக் குடும்பங்களின் வறுமை ஒரு தொடர் பிரச்சினையாக நீடிக் கின்றது.

குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

சமூக எதிர்ச் செயலாளர்கள் (அணtடி குணிஞிடிச்டூ) அதிகரிக்கின்றனர்.

தனக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற் கும் பாரமான தலைமுறை ஒன்று உருவாகின்றது.

போதைவஸ்துப் பாவனை அதிகரிப்ப தற்கும் குற்றச் செயல்கள் கூடுவதற்கும் பொறுப்பாக இருப்பவர்கள் பெரும் பாலும் கல்வியறிவற்ற வர்கள். அவர்கள் பாடசாலைக் கல்வியை பூரணப்படுத்தா மல் இடைவிலகியவர்கள்.

அமெரிக்காவில் ஒரு மாணவனுக்கு அரசாங்கம் செய்யும் செலவை விட ஒரு சிறைக் கைதிக்கு மூன்று மடங்கு அதிக மான செலவினை செய்ய வேண்டியுள் ளது என்று அந்நாட்டின் அரசாங்க அறிக் கைகள் கூறுகின்றன. எனவே பாட             சாலை இடைவிலகல் என்பது மிக சீரியஸான ஓர் பிரச்சினையாகும்.

ஒரு நாட்டின் பொருளாதார, சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கக் கூடிய ஆளுமைகள், மனித வளங்கள் அதன் மூலம் இழக்கப்படுகின்றது. தங்கி வாழ் வோரின் தொகை அதிகரிக்கின்றது. எனவே, எமது பிரதேசங்களில் இயங்கும் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவதற்கு முழுச் சமூகமும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. இதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கிய மானது. ஆசிரியர்களுக்கும் இதில் பாரிய பொறுப்புள்ளது.

இந்தக் கூட்டுப் பொறுப்பை ஒன்றி ணைந்து நிறைவேற்றுவதன் மூலமே கல்வித் துறை மீதான வீண் விரயங்களைத் தவிர்த்து, இடைவிலகலை நீக்கி, கற்ற ஓர் தலைமுறையை உருவாக்க முடியும். தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் எந்த வகையிலும் மாற்ற முடியாதஒரு மோச மான இளைஞர் அணியை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here