பாராளுமன்றத்தைக் கலைப்பதா? நீடிப்பதா? திணறும் 100நாள் அரசாங்கம்

0
0

கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்
(மெரிலான்ட் சாலிஸ்பரி பல்கலைக்கழக மோதல் தீர்வு துறையின் தலைவர்)
 
ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விரும்பியோ அல்லது விரும்பாமலோ சிறி லங்காவுக்கு ஒருவித சர்வாதிகாரத் தன்மையுடன் அழைக்கப்படும் ஸ்திரத் தன்மையை வழங்கி யிருந்தார். வெளிநாட்டு முதலீடுகளின் வகையில் அது நாட்டுக்கு உதவி செய்தது. சீனா மற்றும் இதர முதலீட்டாளர்கள் தங்கள் வளங்களை இந்த அமைப்புக் குள் பாய்ச்ச எண்ணினார்கள்
எனினும், ஜனவரி 2015 இல் அரசாங்கம் மாறியமை நாட்டை ஒரு ஸ்திரமற்ற தன்மைக்குள் தள்ளுவதற்கு சாத்தியத்தை ஏற் படுத்தியது. பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தல் நடத் தும் பிரச்சினை பற்றிய தற்போ தைய மோதலுடன் இது உண் மையாகி விட்டதைப்போலத் தோன்றுகிறது.
இப்பொழுது இயங்கிவரும் அரசியல் முறை ஒரு விசித்திர மான தொகுதி யதார்த்தங்களை யும் மற்றும் தத்துவங்களையும் கொண்டுள்ளது. ஒரு சிறுபான் மை அரŒõங்கம் நியமிக்கப்பட் டுள்ள அதேவேளை, தேசிய பாராளுமன்றில் அறுதிப் பெரும் பான்மையை கொண்ட கட்சி அதைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் பிரதான எதிர்க் கட்சியாகச் செயல்படுகிறது.
இந்த சிக்கலான யதார்த்த நிலையின் ஒரு பகுதியாக, பிரத மர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் ஏப்ரலில் நாடாளுமன்றத்தைக் கலைத்து இந்த வருடம் புதிதாகத் தேர்தல் களை நடத்தவேண்டும் என விரும்புகிறது.
பாராளுமன்றில் இன்னமும் பெரும்பான்மையைக் கொண் டுள்ள சிறி லங்கா சுதந்திரக் கட்சி, பாராளுமன்றினைக் கலைப்பதை எதிர்க்கிறது. அதன் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க ஏப்ரலில் ராஜினாமா செய்தால் தாங்கள் அரசாங்கத்தை அமைக்க தயா ராக உள்ளதாக அடையாளம் காட்டியுள்ளார்கள்.
பாராளுமன்றத்தைக் கலைக் கும் அரசியலமைப்பு அதிகார த்தை கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேன, தனது கட்சி மற்றும் தனக்கு வாக்களித்து அதிகாரத் தில் ஏற்றிய வாக்காளர்கள் ஆகி யோருக்கு இடையில் ஒரு சங்கட நிலமைக்கு முகங்கொடுக்க வேண்டியவராக உள்ளார்.
மோதல் தன்மையான முரண் பட்ட அறிக்கைகள் கொழும்பிலி ருந்து வெளியாகின்றன. ஜனாதி பதி தாமதமான ஒரு தேர்தலை நோக்கி வளைகிறார் என சிலர் தெரிவிக்கும் அதேவேளை, மற்ற வர்கள் ஐக்கிய தேசியக் கட்சி யின் கோரிக்கைக்கு இணங்கும் படி சுட்டிக்காட்ட விரும்புகி றார்கள்.
எனவே, இந்த வருடம் தேர் தல் நடைபெறுமா அல்லது பாரா ளுமன்றின் காலம் பூர்த்தியாகிய பின் 2016ல் தேர்தல் நடக்குமா என்கிற தெளிவற்ற நிலமையே தற்போது காணப்படுகிறது. தேர் தல் நடத்தும் காலம் கூட அதன் முடிவுகளில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்தலாம். எனவே, இந்தப் பிர ச்சினை ஒரு நிச்சயமற்ற நிலை க்கு ஒருவேளை ஒரு ஸ்திரமற்ற நிலைக்கும் முன் தள்ளுகிறது.
தேர்தல்
மஹிந்த ராஜபக்ஷ ஒரு முன் கூட்டிய ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தபோது, தேர்த லுக்குப் பின் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படும் என்று பரவலாகக் கருதப்பட் டது. அதற்கு இரண்டு காரணங் கள் இருந்தன. சிறிசேன பொது எதிரணி வேட்பாளராகப் போட்டி யிடுவதற்கு முன்வருவதற்கு முன்புவரை ராஜபக்ஷதான் தேர் தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த காலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கள் யாவரும் அந்த வெற்றியை பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியை அணுகுவதற்கு உரிய ஒரு பாதையாகப் பயன்படுத்தி னார்கள். அதனால் ராஜபக்ஷ 2015 இல் ஒரு பொதுத் தேர்தலுக் குச் öŒல்வார் என்கிற ஒரு எதிர்பார்ப்பு நிலவியது.
ராஜபக்ஷவையும் மற்றும் அவரது திட்டத்தையும் குழப்பும் வகையில் மைத்திரிபால சிறி சேன தேர்தலில் வெற்றி பெற் றார். ஜனாதிபதி சிறிசேனவினால் கூட பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடியதாக இருந்த போதிலும், அவரது யதார்த்தங் கள் வித்தியாசமானவையாக இருந்தன.
ஐ.தே.க. கூட்டணியின் உதவி யுடன் அவர் ஜனாதிபதித் தேர்த லில் வெற்றி பெற்றதனால், சிறிசேன அந்தக் கூட்டணிக்கு நிரு வாகத்தை அமைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க விரும் பினார். அது தற்போதைய சிறு பான்மை அரŒõங்கம் உருவாக வழியமைத்தது.
ஏப்ரல் அல்லது மே மாதத்தி ற்கு அப்பாலும் தற்போது உள்ள பாராளுமன்றத்துடன் முன்னேறு வது சட்ட ரீதியானதாக இருந்த போதிலும், இரண்டு பிரதான காரணங்களுக்காக அது சட்ட விரோதமாகவும் மற்றும் பிரச்சி னையானதாகவும் தோன்றுகிறது.
முதலாவது ஜனாதிபதித் தேர் தல் முடிவடைந்த உடனேயே ஐ.தே.க.வுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு வாய்ப்பளித்தது நியாயமானதும் மற்றும் சட்ட ரீதியானதாகவும் தெரிகி றது. ஏனெனில், மக்கள் அந்த மாற்றத்துக்கு தங்கள் ஆணை யை வழங்கியிருந்தார்கள். வாக் காளர்கள் வெளிப்படையாகவே ஒரு புது நிருவாகத்தை விரும்பி னார்கள்.
எனினும், சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை நீண்டகாலத் துக்குக் கொண்டு செல்வது நெறி முறைக்கு ஒவ்வாதது. விஷேட மாக பாராளுமன்றத்தில் இன்ன மும் எதிர்க்கட்சி ஒரு தெளிவான பெரும்பான்மையை கொண்டி ருக்கும் தருணத்தில், இந்த நிலை ஜனவரியில் ஜனநாயகத்துக்கும் மற்றும் நல்லாட்சிக்கும் வாக்கா ளர்கள் வழங்கிய ஆணையி னைக் கேலிக்கூத்தாக மாற்றும்.
இரண்டாவதாக, அது ஸ்திரத் தன்மையற்ற நிலைக்கு வழிய மைப்பதுடன் பொருளாதார ஆதாயங்களையும் சீர்குலைக் கும். ஏனெனில், சிறி.ல.சு.க தலை வரின் ஒரு தலையசைப்புடன் எந்த நேரத்திலும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடி யும். எனவே, தற்போதைய கொள் கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட் டங்கள் ஒரு கணிசமான காலத் துக்கு தொடரும் என்பதற்கு எது வித உத்தரவாதமுமில்லை.
நிச்சயமற்ற தன்மை முதலீட் டாளர்களுக்கு வெறுப்பையே தரும். சிறி.ல.சு.க தலைமை ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்கம் போன்றவற்றைக் காட்டி அரŒõங் கத்தை அச்சுறுத்தி வருகிறது.
சிறி.ல.சு.க வின் அழுத்தங்கள் கூட பெரும்பாலும் முன்னைய சிறி.ல.சு.க தலைமையிலான அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகி யோரின் மீது சுமத்தப்பட்டிருக் கும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுகள் மீது ஒரு மென்மை யான போக்கை கடைப்பிடிப்ப தற்கு தற்போதைய ஆட்சியாளர் களை கட்டாயப்படுத்தலாம்.
பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வுடன் சிறி.ல.சு.க தீவிரமான சவால்களை முன்னெடுக்காமல் ஜனாதிபதி சிறிசேன அதை தடுத்து வருகிறார் போலத் தெரி கிறது. தேர்தல் 2016 இல் நடந் தால் ஐ.தே.க. தனது உந்து சக்தி யை இழந்துவிடும் என்பதற்கு ஏற்கனவே கட்சிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தலிலும் தோற்றுவிடும். எனவே, தற்போ தைய நிருவாகத்தின் விதி ஜனா திபதி மற்றும் சிறி.ல.சு.க என் பனவற்றிலேலேயே தங்கியுள் ளது. இது அரசியல் ஸ்திரத் தன் மைக்கு உகந்தது அல்ல.
காட்சிகள்
பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்படாவிட்டால் இதற்கு இரண்டு சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, ஐ.தே.க. 100 நாள் திட் டத்தை நிறைவேற்றுவது. அதன் பின் உடனடியாக தேர்தல் நடத்து வது என்கிற வாக்குறுதியையும் மீறி ஆட்சியைத் தொடர்வது.
அதிலுள்ள பிரச்சினை என்ன வென்றால், அடுத்த பாராளு மன்ற தேர்தலை நடத்துவதற் கான காலத்தை நீட்டுவதற்கு ஏற்ப அது வெற்றிபெறுவதற்கு எதிர்பார்க்கும் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடையும். ஐ.தே.க. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆவல் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதேநேரம், எதிர்க்கட்சியில் இருந்து தேர்தலை எதிர்கொள் வதை விட, காபந்து அரசாங்கத் தில் இருக்கும்போதே தேர்தலை எதிர்கொள்வதினால், அரச வளங் களின் ஆதாயங்களைப் பயன் படுத்திக் கொள்ள முடியும். மேலே விபரிக்கப்பட்ட காரணங் கள் தொடர்ந்தும் சிறுபான்மை அரŒõங்கத்தைக் கொண்டு நடத்து வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி யை ஊக்கப்படுத்தாது.
ஐ.தே.க.வுக்கு உள்ள இரண் டாவது தெரிவு, பாராளுமன்றம் ஏப்ரலில் கலைக்கப்படாவிட் டால் ராஜினாமா செய்வது. அப்போது ஜனாதிபதி அரசாங்க த்தை அமைக்கும்படி சிறி.ல.சு.க வினை அழைப்பார். இது முற்றி லும் சட்ட ரீதியானது; ஆனால் கொள்கையற்றது.
ஜனவரியில் நடந்த தேர்தல் ராஜபக்ஷவுக்கு மட்டும் பொரு த்தமானது அல்ல. அது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் ஆட்சி நடைபெற்ற பாணிக்கும் பொருத்தமானது ஆகும். அது ஒரு அமைப்பின் மாற்றத்துக்கா னது. இதனால்தான் வேட்பாளர் சிறிசேனவும், அவரது கூட்டணி யினரும் அரசியலமைப்பு சீர் திருத்தத்தை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கினார்கள்.
நல்லாட்சியின் குறைவு அந்த தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சி னையாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here