பாராளுமன்றத் தேர்தலின் பின்னர்…

0
1
  • விக்டர் ஐவன்

தேர்தலின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் அமைப்புகள் உட்பட நாட்டின் மொத்த அரசியல் கட்டமைப்பும் பாரிய சிக்கலுக் குள்ளாகும் நிலையொன்று ஏற்படும்.

மக்களது நம்பிக்கையை வெல்லும் வகையிலான பெறுபேறொன்றை ஆளும் கட்சி பெறாவிடின் கொள்கை ரீதியாக அரசாங்கத்திற்குள்ள பிடிமானத்தில் தளர்வு நிலையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது.

19 ஆம் யாப்புத் திருத்தத்தை இல்லா தொழிப்பதற்கு அரசாங்கத்திற்கு முதன்மை யான தேவைப்பாடொன்று காணப்படு கின்ற போதிலும் அதனை இல்லாமலாக் கும் அளவுக்கான அதிகாரமொன்று அரசுக் குக் கிடைப்பதற்கான வாய்ப்பு குறை வாகவே உள்ளது. அவ்வாறான அதிகார மொன்று கிடைக்கப் பெற்றாலும் ஜனாதி பதி தம்பிக்கும் பிரதமர் அண்ணாவுக்கும் இடையில் பொது உடன்பாடொன்றுக்கு வருவது இலேசான விடயமல்ல.

19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி தம்பியின் அதிகாரத்தை விட அண்ணன் பிரதமரின் அதிகாரம் மிகைத்துக் காணப்படும். இச்சந் தர்ப்பத்தில் அண்ணின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு தம்பி ஒரு காலை பின் வைக்க வேண்டும் அல்லது தம்பியிடம் காணப்பட்ட முன்னைய அதிகாரத்தை தொடர்ந்தேர்ச்சி யாக கொண்டு செல்வதற் காக வேண்டி அண்ணன் தனது அதிகா ரத்தை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். இல்லாவிட்டால் இருவருக்குமிடையில் அதிகாரப் போட்டியொன்று ஏற்படுவதற் கான வாய்ப்புள்ளது.

இருண்ட பொருளாதாரம்

அரசாங்கம் தேர்தலில் பெறவுள்ள வெற்றி எவ்வகையானதாயினும் அரசாங் கத்தின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதில் முகங்கொடுக்க வேண்டியுள்ள வருமானம் செலவுகளுக் கிடையிலான பாரிய வித்தியாசமானது அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகளை மாத்திரமன்றி மக்களது அன்றாட வாழ்க்கை யையும் பாரிய சிக்கலுக்குள்ளாக்கும் நிலைமையொன்றே காணப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் அவர்களது மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்காமல் இருந்தும் கூட மத்திய வங்கயினால் அரச வங்கி களுக்கு வழங்கப்படும் மிகைப்பற்றின் (Oதிஞுணூ ஞீணூச்ஞூt) மூலமே வழங்கப்படுகின்றது. இம்முறைமையை நீண்டகாலம் நடை முறைப்படுத்த முடியாது. இம்முறைமை தொடர்ந்தால் அரச வங்கிகளும் வீழ்ச்சிஅடையும் நிலையை அடையலாம்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவானது இலகுவில் மீட்சி அடை யும் நிலையில் இல்லை. கோவிட் 19 காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவானது இலங்கை யின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் பிரதான வழியான வெளி நாட்டுத் தொழிலாளர்கள் பிரதானமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தொழிலா ளர்களின் தொழில் உறுதிப்பாடானது ஆபத்தான நிலையிலேயே உள்ளது. கணப் பீடு செய்யப்பட்டுள்ளதன்படி 5 இலட்சம் தொழிலாளர்கள் தமது வேலையை இழப் பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கைக்குக் கிடைக் கப் பெறும் அந்நியச் செலாவணியில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்படும்.

அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் அடுத்த பிரதான வருமான வழியான சுற்றுலாத் துறையும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதேபோல் ஏற்றுமதி ஆடைக் கைத்தொழில் துறையும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இத்தொழில் துறையில் பலர் ஏற்கனவே வேலை வாய்ப்பை இழந்துள்ளதுடன் இன்னும் பலர் எதிர்காலத்தில் வேலை இழக்கும் நிலைமையே காணப்படுகின் றது. இதன் காரணமாக அரசாங்கத்தின் செலவுகளுக்கான வருமானத்தைப் பெறு வதற்காக மக்களின் மீது அதிக வரிச்சுமை களை சுமத்துவதற்கான நிலைமை அரசாங் கத்திற்கு ஏற்பட்டு, அதனால் மக்கள் பாதிக் கப்படும் நிலைமையொன்று ஏற்படும்.

பிரச்சினைகளின் அதிகரிப்பு

ஏற்படவுள்ள அனைத்துப் பிரச்சினை களும் ஒன்று சேரும் சந்தர்ப்பத்தில் இருக் கின்ற நெருக்கடி இன்னும் சிக்கலுக்குள் ளாகும் நிலமையே ஏற்படும். உலக வங்கி யின் கணிப்பீட்டின்படி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி -3 வீதமாகக் குறை யும். தொழில் இழப்பவர்கள் 10 இலட்சம் வரை அதிகரிக்கும். சேமிப்பு வட்டியின் மூலம் வாழ்பவர்களின் வாழ்க்கை பாதிப் படையும். சம்பளக் குறைப்பு, மேலதிக நேர வேலை கொடுப்பனவு இன்மை போன்ற காரணங்களால் தொழில் செய்ப வர்களின் வாழ்க்கையும் கூட பாதிப்படை யும்.

இந்தப் பொருளாதார, சமூக சூழலானது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். தொழி லாளர் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கு மத்தியிலான குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தும். நாட்டில் களவு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களும் இதன் காரண மாக அதிகரிக்கும்.

ஏற்பட்டுள்ள இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மீளச் செலுத்த வேண்டிய உள்ள கடன் கொடுப்பனவு களை உரிய முறையில் முகாமை செய்யா விடின் முக்கியமாக வணிக வட்டி வீதத் திற்குப் பெற்றுள்ள வணிகக் கடன்களின் ஒரு தவணையாயினும் உரிய முறையில் மீளச் செலுத்தாவிடின் இலங்கையானது வங்குரோத்து நாடு என்று அடையாளப் படுத்தப்படும்.

நாட்டின் முக்கியமான சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமே இவ்வாறான பிரச்சினையிலிருந்து அரசாங்கத்திற்கு மீள முடியும். நாட்டின் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கான நடைமுறைச் சாத்தியமான மாற்றுத் தீர்வுகள் தொடர்பான எந்தவித மான பார்வையும் இந்த ஆட்சியாளர் களிடம் இல்லை. எனவே அவர்கள் நாட்டின் பெறுமதியான சொத்துக்களை பலம் வாய்ந்த நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கே கூடுதலாக விரும்புவர்.

தோல்வி நிலையின் ஆழம்

இலங்கை அடைந்துள்ள இந்தப் பாரிய பின்னடைவிலிருந்து மீள்வதற்கு இலங் கைக்குத் தேவையிருப்பின் இப்போதாவது சுதந்திரத்திலிருந்து இன்றுவரை நாட்டின் செயற்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பது தொடர்பாக ஒரு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கையானது தொடர்ந்தேர்ச்சியாக தேர்தல்களை நடாத்தி வந்திருந்தாலும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூற முடியாது. சுதந்திரத்தின்போது இலங்கை மக்களில் ஒரு பிரிவினர் நவீனத்தை அடைந்திருந்தாலும் ஜனநாயக அரசியல் முறைமையொன்றை கொண்டு செல்லும் அளவிற்கு இலங்கையின் அப்போதை தலைவர்களோ இலங்கை மக்களோ நவீனத்தை அடைந்திருக்கவில்லை. இலங் கையில் சுதந்திரப் போராட்டமொன்று இல்லாமலேயே இலங்கை சுதந்திரத்தை பெற்றுக் கொண்டமை இந்தப் பின்னடை வுக்குப் பிரதான காரணமாகும்.

எங்களுக்கு முதிர்ச்சியடைந்த தலைவர் கள் காணப்படவில்லை. முதிர்ச்சியுள்ள தலைவர்கள் உருவாவதும் சுதந்திரப் போராட்டத்தின் மூலமே. முதலாவது பிரதமர் உட்பட தற்போதைய தலைவர்கள் வரை அனைத்துத் தலைவர்களும் அரசியல் யாப்பை மீறுபவர்களாகவே காணப்பட்ட னர். இலங்கைச் சமூகமும் யாப்பை மீறுவது என்பதனைப் பாரிய குற்றமாக என்றுமே கருதவில்லை. யாப்பை பாது காக்க வேண்டிய நீதிமன்றம் கூட அவ்வா றான சந்தர்ப்பங்களில் யாப்பை மீறுபவர் களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாகவே காணப்பட்டனரே அன்றி யாப்பை பாது காப்பவர்களாக நடந்துகொள்ளவில்லை. இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகி களின் பிற்போக்குத் தனத்தை இதன் மூலம் கண்டுகொள்ள முடியும்.

இன, மத, குலங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அங்கீகரிக்காது நவீன இலங்கை சமூகத்தை கட்டியெழுப்பாமை யானது இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு முதன்மையான காரணிகளில் ஒன்றாகும். இதன் காரணமாக ஏற்பட்ட மோதல்களுக்கு இலங்கை செலுத்தியுள்ள விலை மிக அதிகமாகும். கணீப்பீடு செய் யப்படுள்ளதன்படி இதன் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட நட்டமானது சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நாங்களே எவ்வளவு தூரம் எமது நாட்டை பின்னடைவுக்குக் கொண்டு சென்றுள் ளோம் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி களுக்கான இன்னொரு பிரதான காரணம் 1978 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களால் தமது பொறுப்பி லுள்ள சொத்துக்களை கொள்ளையடிப்ப தாகும். இலங்கை அரசாங்கமானது ஜன நாயக அரசாங்கமன்று கொள்ளைக்காரர் களின் அரசாங்கமாகும்.

இலங்கை நீதிமன்ற செயற்பாட்டின் சந்தர்ப்பவாதம் மற்றும் இயலாமை என்ற இரு விடயங்களும் இலங்கை அடைந் துள்ள இந்த பின்னடைவுக்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

இலங்கை அடைந்துள்ள இந்த பின்ன டைவுகளிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத் திற்கு தேவையுள்ளதெனின் இந்த மூன்று விடயங்களிலும் நாம் விட்டுள்ள பிழைகள் தொடர்பாக  மீள்பரிசீலனை செய்து அதனை வெற்றிகொள்வதற்கான முறைமை களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here