பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி கூடும்

0
0

அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இணக்கம் ஏற்படாத நிலையில் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் அனுமதி பெற நேற்று விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெற்றது. சிவில் பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் பாராளுமன்றம் ஒத்துவைக்கப்பட்டு இரு தடவை கட்சித் தலைவர் கூட்டம் நடத்தப்பட்ட போதும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இன்னிலையில் நேற்று ஒரு மணி நேரமே பாராளுமன்றம் கூடியது. சபை நேற்று 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து தினப்பணிகளுக்கு செல்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி. இன்று விவாதத்திற்கு எடுக்கும் விடயம் தொடர்பில் சபையை தற்காலிகமாக ஒத்திவைத்து கூட்டி அதில் முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறினார். இதற்கமைய சபையை ஒத்திவைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவதாக சபாநாயகர் அறிவித்தார்.
முற்பகல் 10.20 மணிக்கு சபை அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சபை நடவடிக்கைகள் சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னரே கூடியது. சபை மீண்டும் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது.
அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகள் எழுத்து மூல அனுமதியைப் பெற்று எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here