பிரதமரின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட இணைப்புச் செயலாளராக கருணா

0
19

3000 படை வீரர்களை ஒரே தினத்தில் கொன்றதாக தேர்தல் காலங்களில் தம்பட்டம் அடித்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அம்பாறை மாவட்டத்துக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்குமான தனது ஒருங்கிணைப்புச் செயலாளராக பிரதமர் நியமித்துள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் (13) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக ஏற்கனவே பிள்ளயைான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்திற்கான பிரதமரின் இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here