பிரதமர் போட்டியிட்ட மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் குறைவு

0
0

2015 பாராளுமன்றத் தேர்தலை விட 2020 பாராளுமன்றத் தேர்தல்களில் குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

பிரதமர் போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 10.6 வீதத்தால் குறைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் 13 ஆம் நூற்றாண்டு கால புராதனச் சின்னம் இந்த மாவட்டத்தில் அரச தரப்பைச் சேர்ந்தவர்களால் உடைக்கப்பட்ட போதும் அதற்கெதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. 2015 பாராளுமன்றத் தேர்தலில் 79.63 ஆக இருந்த வாக்களிப்பு வீதம் 2020 இல் அண்ணளவாக 69 வீதமாகக் குறைந்திருந்தது.

அதேபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்  மரண தண்டனைக் கைதியான சொக்கா மல்லி எனப்படும் பிரேமலால் ஜயசேகர போட்டியிட்ட இரத்தினபுரி மாவட்டமும் வாக்களிப்பு மிகவும் குறைந்த மாவட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு வாக்களிப்பு 9.88 வீதத்தினால் குறைந்துள்ளது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் 80.88 ஆக இருந்த வாக்களிப்பு வீதம் 2020 இல் அண்ணளவாக 71 வீதமாகச் சரிந்துள்ளது.

2015 தேர்தலுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு (2.8 வீதம்), யாழ்ப்பாணம் (2.4 வீதம்) வன்னி (1.11 வீதம்) மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்பட்டது.

மாவட்டம் 2020 பா.தே 2015 பா.தே. மாற்றம் 2019 ஜ.தே. மாற்றம் (2019-20)
நுவரெலியா 75 78.77 3.77 85.06 10.06
இரத்தினபுரி 71 80.88 9.88 87.11 16.11
பதுளை 74 80.07 6.07 86.25 12.25
திருகோணமலை 74 74.34 0.34 82.97 8.97
மொனராகலை 73 80.13 7.13 88.02 15.02
வன்னி 73 71.89 1.1 + 76.59 3.59
அம்பாந்தோட்டை 73 81.20 8.2 87.40 14.40
கொழும்பு 72 78.93 6.93 82.82 10.82
திகாமடுல்ல 72 73.99 1.99 82.32 10.32
மட்டக்களப்பு 72 69.12 2.88 + 77.20 5.20
கேகாலை 71 79.81 8.81 85.89 14.89
மாத்தறை 71 78.61 7.61 85.93 14.93
களுத்தறை 71 80.13 9.13 85.71 14.71
மாத்தளை 71 78.73 7.73 85.30 14.30
கண்டி 71 79.13 8.13 84.89 13.89
பொலன்னறுவை 71 79.81 8.81 85.92 14.92
அனுராதபுரம் 71 79.13 8.13 85.76 14.76
காலி 69 78.00 9.00 85.15 16.15
குருநாகலை 69 79.63 10.63 85.24 16.24
கம்பஹா 69 78.21 9.2 83.31 14.31
யாழ்ப்பாணம் 64 61.56 2.44 + 68.03 4.03
புத்தளம் 63 68.83 5.83 76.56 13.56

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here