பிரான்ஸ் ஜனாதிபதியாக மெக்ரோன் | ஒரு பார்வை

0
0

இறுதிச் சுற்றில் லீ பென் என்பவரை தோல்வியடையச் சென்று இமானுவல் மெக்ரோன் பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியுள்ளார். மக்கள் மெக்ரோனின் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லீ பென் வலதுசாரி தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் ஆவார்.

லீ பென் ஓர் வெள்ளை இனவாதி என அறியப்பட்டவர். ஆனால், அவர் தோற்றுவிட்டார் என்பது அங்கு இனவாதம் தோற்றுவிட்டது என்பதன் அர்த்தமல்ல. பிரான்ஸில் கொதித் தெழும் இஸ்லாமியப் பீதிக்கு லீ பென் தெரி வாகியிருந்தால் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்திருப்பார் என்ற அச்சம் இருந்தது. ஆனால், மெக்ரோன் இனவாதத்தை வெல்வார் என்றோ இனவாதம் வளராமல் தடுப்பார் என்றொ சொல்வதற்கில்லை.

லீ பென்னுக்கு எதிராக வாக்களித்தவர்கள் இனவாதத்தை தோற்கடிப்பதற்கே முயன்றனர். ஆனால், சமீபகாலமாக பிரான்ஸில் வளர்ந்து வரும் சகிப்பின்மை, இனக்குரோதம், முஸ்லிம் கள் மற்றும் கறுப்பின மக்கள் தொடர்பிலான பாகுபாடுகள் என்பவற்றை மெக்ரோன் வெல் வாரா அல்லது அவற்றைத் தூண்டி வளர்ப்பாரா என்ற சந்தேகம் அங்கு நீடிக்கவே செய்கின்றது.

இன வெறுப்பை வெற்றி கொள்வதற்கு மெக்ரோனுக்கு ஆதரவளியுங்கள் என்றே அந்நாட்டில் மிதவாதிகள் பிரச்சாரம் செய்தனர். முன்னாள் நீதி யமைச்சரும் பிரபல அரசியல்வாதியுமான கிறிஸ் டியன்டோபிரா, மெக்ரோனுக்கு வாக்களித்தமைக் கான காரணத்தைக் கூறும்போது, பிரான்ஸில் மக் கள் இன-மத அடிப்படையில் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் ஒன்றுபட வேண்டும். செனகல் நாட்டு குடியேற்றவாசிகள், பிற ஆபிரிக்க கறுப்பின மக்களை பிரான்ஸின் மேட்டுக்குடி சமூகம் ஒதுக்கி வருவதும் வெறுப்பதும் பாரதூரமான சமூக அமைதியின்மையையே உருவாக்கும்.

குடிபெயர்ந்தோர்களிடையே பாரிய வறுமை நிலவுகின்றது. அவர்களின் குடும்ப வருமானம் ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவாகும். இந்நிலையில் எதிர்கால ஜனாதிபதி சமூக நீதியை நிலைநாட்டு வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் நீதி யமைச்சர் கூறுகிறார்.

அனால் இமானுவல் மெக்ரோன் இந்த இலக்கை அடையும் நிலையில் உள்ளாரா? இது பலரும் எழுப்பும் கேள்வி. நவீன பிரான்ஸின் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஜனாதிபதியானவர் மெக் ரோன். 39 வயதான இவர் ஒரு முதலீட்டு வங்கி யாளர் ஆவார். புதிய தாராண்மைவாதக் கொள்கை களுக்கு ஆதரவான மெக்ரோன், சமூக விவகாரங்களிலும் ஓரளவு மிதவாதி எனக் கருதப்படுபவர். ஆனால், தற்போதைய பிரான்ஸ் சமூகம் எதிர் கொண்டுள்ள இன வெறுப்பு விவகாரங்கள் குறித்த அவரது நிலைப்பாடு தெளிவற்றதாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் பிரான்ஸ் பொலிஸ் ஒருவர் ஒரு கறுப்பினப் பெண்ணை கற்பழித்து, அடித்துத் துன் புறுத்தியபோது மென்ரோன் எவ்விதக் கருத்தையும் வெளியிடவில்லை. மற்றொரு கறுப்பர் பொலிஸா ரால் கொல்லப்பட்டார். பிரான்ஸில் பொலிஸார் கறுப்பின மக்களை பாகுபாடாக நடத்துகின்றனர்.

132 ஆண்டுகள் பிரான்ஸ் அல்ஜீரியாவை கால னித்துவப்படுத்தியிருந்தது. அந்தக் காலனித்துவ த்தை மனித குலத்திற்கு எதிரான குற்றமென்று மெக்ரோன் குறிப்பிட்டிருந்தாலும் இதே வகையான காலனித்துவத்திற்கு நல்ல விளைவுகளும் உண்டு என்று அவர் வாதாடுகின்றார். எவ்வாறாயினும், பிரான்ஸின் புதிய ஜனாதிபதி நாட்டில் வளர்ந்து வரும் இனவாதத்தைக் கட்டுப்படுத்து வதற்கு எந்தளவு மிதவாதத்துடன் செயற்படுவார் என்பது சிக்கலான கேள்வியே. ஆபிரிக்கக் கறுப் பின மக்களும் பிரான்ஸில் குடியேறி வாழும் வட ஆபிரிக்க முஸ்லிம் நாட்டவர்களும் இந்த சந்தேகத்துடன் தான் வாழ்கின்றனர்.

அமெரிக்காவில் வளர்ந்து வரும் சமீபத்திய இனவாதத்தை பிரான்ஸின் இனவாதம் மிகைத்து விடுமோ என்ற அளவுக்கு விளிம்பு நிலைப்பட்ட மக்கள் மிகுந்த அச்சத்தோடும் ஐயத்தோடும் வாழும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மெக்ரோனின் வெற்றி இன ஒருமைப்பாட் டிற்கும் சமூக நீதிக்குமான வெற்றியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here