பிலிப்பனைஸில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்

0
1

பிலிப்பைன்ஸில் அரச படைக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு ஆயுதக் குழுக்களே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஜெனரல் எடுவாடோ தெரிவித்துள்ளார். ஐசிஸ் பயங்கரவாதிகள் தெற்கு நகரில் அரச படைகளை எதிர்த்துப் பொர் செய்வதாக அவர் தெரிவித்தார்.

கிறிஸ்தவ நாடான பிலிப்பைன்ஸில் பல தசாப்தங்களாக சுதந்திரத்திற்காகப் போராடி வந்த ஆயுத இயக்கம் அமைதியடைந்துள்ள நிலையில், நாட்டில் ஸ்திரப்பாட்டைக் குலைக்கும் சில ஆயுதக் குழுக்கள் அங்கு ஊடுருவியுள்ளதாக ஜெனரல் மேலும் தெரிவித்துள்ளார்.

எசோஸியேடட் பிரஸ் ஊடகத்திற்கு செவ்வியளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரமழானின் தொடக்கத்திலிருந்து வன்முறைகள் பிலிப்பைன்ஸின் தெற்கு நகரங்களில் பரவி வருகின்றன. பிலிப்பைன்ஸில் மின்டானோ, யால போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here