பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
0

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (17.05.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம்.ஐ. செய்கு அலி கலந்து கொண்டார்.
இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை 65 மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ. எம். அப்துல் காதர் (பலாஹி), பீகாஸ் நிறுவனத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களான ஏ.எச். அஸ்மி ஹசன் மற்றும் எம்.எஸ்.எம். நுசைர், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூரி விரிவுரையாளர் மௌலவி எம்.பீ.எம். பாஹிம் (பலாஹி), காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் எஸ்.எம்.எம். பஷீர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.ஆர். ஜவாத் , ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ், எம்.எம். ஷாபி மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் பாடசாலை கீதம், உரையாடல், கஸீதாக்கள், ஹதீஸ் நாடகம் மற்றும் அல்குர்ஆனின் அற்புதங்கள் எனும் தலைப்பிலான மாநாடும், பார்வையாளர்களின் உளங்களை கவர்ந்த Bismi Reciter போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Bismi Alquran School 7 Bismi Alquran School 1 Bismi Alquran School 2 Bismi Alquran School 4 Bismi Alquran School 5 Bismi Alquran School 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here