புன்னகையுடன் பாடசாலைக்கு…

0
1

கல்வி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது. கல்வி இல்லாத சமூகம் தனது அடையாளத்தையே இழந்துவிடும் அபாயம் இருக்கின்றது. எனவே ஒவ்வொரு சமூகமும் கல்விக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் அதனைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும். எனவே எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டவும் சவால்களை வென்றெடுக்கவும் ஆத்மீகத்துடன் கூடிய கல்வியை வழங்குவதில் நாம் கரிசனை கொள்ள வேண்டும்.

இந்த வகையில் ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுக்கும் நோக்கில் ஸம்ஸம் பவுண்டேஷன் செயற்படுத்தி வருகின்ற School with a Smile  எனும் வேலைத்திட்டம் விஷேடமானதாகும்.

கடந்த வருடம் சுமார் 12,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர். இத் திட்டத் தின் மூலம் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 3000 ரூபா பெறுமதியான ஒரு பாட சாலை உபகரணப் பொதியைப் பெறுகிறார். இதில் ஒரு புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள், காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

மாணவர்களின் கல்வி வாழ்க்கை இடைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் என இத்திட்டம் பல நோக்கங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் முஸ்லிம்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு அல்லாமால் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் உள்வாங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதனால் சகவாழ்விற்கான விதையை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதிலும் இத் திட்டம் பங்களிப்பதாக அமையும்.

நாடு முழுக்க வசிக்கும் அனைத்து மாணவர்களின் தேவையையும் தனி ஒரு தரப்பினால் நிறைவு செய்ய முடியாது என்ற வகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம், சமூக நிறுவனங்கள் இதனை முன்னெடுக்க முடியும். ஸம்ஸம் அமைப்பானது எதிர்வரும் ஆண்டுக்கான School with a Smile வேலைத் திட்டத்தை  தற்போது துவங்கியிருக்கிறது.

இது போன்ற செயற்திட்டங்களை  ஒவ்வொரு ஊரிலும் செயல்படுத்த முடியும். 500 மாணவர்களுக்குக் குறையாத தொகையை பொறுப்பேற்கின்ற ஊர்கள் ஸம் ஸம் பவுண்டேஷன் உடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். உதாரணமாக ஒரு ஊரில் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ இணைந்து 1000 மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்க முன்வரும் பட்சத்தில் ஸம்ஸம் பவுண்டேஷன் மேலும் 1000 மாணவர்களுக்கு உதவி செய்யும். அப்போது அப் பிரதேசத்தில் 2000 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயன்பெறுவர்.

அந்தவகையில் ஸம்ஸம் பவுண்டேஷன் மொத்தம் 10,000 மாணவர்களுக்கு உதவத் தயாராக உள்ளது. இதில் 30 வீதம் உங்கள் பகுதியில் உள்ள முஸ்லிம் அல்லாத மாணவர்களும் பயன்பெறுவார்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை திட்ட முகாமையாளர் ரிஸ்வான் ஸீதின் 0772118888 உடனோ  www.schoolwithasmile.com உடனோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

-இன்ஸாப் ஸலாஹுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here